கிரிக்கெட் ஜெண்டில்மேன்கள் விளையாட்டு என்று சிலர் சொல்லி நாம் கேள்விபட்டிருப்போம். இதனை  ஹசீம் ஆம்லா, தோனி போன்ற  வீரர்கள் நிரூபித்து வருகின்றனர்.

ஐ.பி.எல் பத்தாவது சீசனின் இன்றைய லீக் போட்டியில் பெங்களூர் அணியும் பஞ்சாப் அணியும் பலப்பரீட்சை செய்து வருகின்றன.

இதில் டாஸ் வென்ற பெங்களூர் அணியின் கேப்டன் விராத் கோஹ்லி  முதலில் பந்துவீச்சை  தேர்வு செய்தார்.

இதனையடுத்து முதலில் களமிறங்கிய பஞ்சாப் அணிக்கு ஹசீம் ஆம்லா மற்றும் மார்டின் கப்தில் துவக்கம் கொடுத்தனர்.

இதில் போட்டியின் முதல் ஓவரின் 5வது பந்தை ஆம்லா எதிர்கொண்ட போது அது அவரது பேட்டை உரசி விக்கெட் கீப்பரிடம் சென்றது.

வீடியோ;

http://www.iplt20.com/video/102521/hashim-amla-the-fair-play-ambassador-

பந்து உரசி சென்றதை பவுலரும், விக்கெட் கீப்பரும் கூட அவுட் கேட்டு அப்பீல் செய்யவதற்கு முன்பாகவே ஆம்லா தானாகவே பெவிலியன் திரும்பினார். அதன் பிறகே அம்பயரும் சுதாகரித்து கொண்டு அவுட் கொடுத்தார்.

இதற்கு முன்பு கொல்கத்தா அணியுடனான லீக் போட்டியின் போது இக்கட்டான நேரத்தில் அம்பயர் அவுட் கொடுப்பதற்கு முன்பாகவே தோனி தானாக வெளியேறி இருந்தது குறிப்பிடத்தக்கது.