fbpx
Connect with us

Cinemapettai

காஷ்மீர் பிரச்சினை.. தமிழகத்தை சுட்டிக்காட்டி நாடாளுமன்றத்தில் அமித்ஷா பேச்சு

Politics | அரசியல்

காஷ்மீர் பிரச்சினை.. தமிழகத்தை சுட்டிக்காட்டி நாடாளுமன்றத்தில் அமித்ஷா பேச்சு

டெல்லி: சிறப்பு அந்தஸ்து இல்லாமலே தமிழ்நாட்டில் தமிழ் மொழி காக்கப்பட்டு இருப்பதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா நாடாளுமன்றத்தில் பேசி உள்ளார்.

ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு உரிமைகளை வழங்கக் கூடிய அரசியல் சாசனத்தின் 370 பிரிவை நீக்குவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

இது தொடர்பாக உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசுகையில், “காஷ்மீர் என்பது இந்தியாவிற்கு மணிமகுடம் போல. அதை நாம் பாதுகாக்க வேண்டும். காஷ்மீரை 370 சட்டம் இத்தனை நாட்கள் சிதைத்துக் கொண்டு இருந்தது. மக்களை வளர விடமால் தடுத்தது.

சிறப்பு அதிகார சட்டம் இல்லாமல் மற்ற மாநிலங்கள் எல்லாம் நன்றாக இருக்கிறது. சிறப்பு சட்டங்கள் இல்லாமல் மாநிலங்களின் உரிமைகள் காக்கப்பட்டுள்ளது. தமிழகம் ஆந்திர பிரதேசம் போன்ற மாநிலங்கள் இந்த சட்டம் இல்லாமல்தான் முன்னேறி உள்ளது.

இந்த சட்டம் இல்லாமலே அவர்களின் மொழி காக்கப்பட்டு இருக்கிறது. அவர்களுக்கு எல்லாம் எந்த பிரச்சனையும் இல்லையே. அவர்களின் மொழிக்கு இதனால் எந்த விதமான பாதிப்பும் ஏற்படவில்லை. அதேபோல் காஷ்மீரின் கலாச்சாரத்திற்கும் எந்த பிரச்சனையும் இதனால் ஏற்படாது. மோடி ஆட்சிக்கு வந்ததால்தான் தற்போது இந்த சட்டம் நீக்கப்பட்டுள்ளது என்றார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top