fbpx
Connect with us

Cinemapettai

ஸ்டீவ் ஸ்மித்தின் கிரிக்கெட் கிட்டை கராஜில் வைத்த தந்தை. வீடியோ உள்ளே !

News | செய்திகள்

ஸ்டீவ் ஸ்மித்தின் கிரிக்கெட் கிட்டை கராஜில் வைத்த தந்தை. வீடியோ உள்ளே !

ஐசிசி கூட ஆஸ்திரேலிய வீரர்கள் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் பெரிதாக தணடனை கொடுக்கவில்லை. எனினும் அனைவரும் ஆச்சர்ய படும் வகையில் கிரிக்கெட் ஆஸ்திரேலியா கடுமையான தண்டனையை விதித்தது. தலைவர் ஸ்மித் மற்றும் துணை தலைவர் வார்னருக்கு ஒரு ஆண்டு விளையாட தடையும், பான்க்ராப்ட்டுக்கு 9 மாதம் தடை விதித்தது. மேலும் தடை முடிந்த பின் 12 மாதம் கழித்தே தலைமை பொறுப்புக்கு ஸ்மித், பான்க்ராப்ட் பரீசலனை செய்யப்படுவர் என்றும். வார்னர் வாழ்நாள் முழுக்க ஆஸி அணியின் கேப்டன் ஆக முடியாது என்று அறிவித்தனர்.

steve smith with his father Peter

ஆஸ்திரேலிய ஏர்போர்ட்டில் ஸ்மித் நடத்தப்பட்ட விதம் பலருக்கும் வருத்தத்தை கொடுத்தது. மேலும் பத்திரிகையாளர் சந்திப்பில் ஸ்மித் முழு தவறுக்கும் தானே காரணம் என பொறுப்பேற்றார். அப்பொழுது ஸ்டீவ் ஸ்மிதா மனமுடைந்து அழுத்த பொழுது அவர் தந்தை பீட்டர் அவரை சமாதானப்படுத்த முயன்றார்.

இந்தநேரத்தில் “செவென் நியூஸ்” என்ற சேனல், ஸ்மித்தின் அப்பா கிரிக்கெட் கிட்டை எடுத்து போய் கராஜில் வைப்பதை படம் பிடித்துள்ளனர். மேலும் பீட்டர் 12 மாதம் கிரிக்கெட் விளையாடாவிட்டாலும் அவன் வாழ்வான் என்று க்கொருவதும் பதிவாகியுள்ளது.

இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.
Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top