Connect with us

Cinemapettai

amitash

Tamil Cinema News | சினிமா செய்திகள்

சாந்தனு தான் காரணம்.. உருகும் ‘அமுல் பேபி’ அமிதாஷ்!

வேலையில்லா பட்டதாரி படத்தில் தனுஷ் அந்த படத்தின் வில்லன் அமிதாஷை, ஹே அமுல் பேபி என்று செல்லமாக அழைப்பார். அந்த வார்த்தை ரொம்பவே வைரலானது. இந்நிலையில் அமிதாஷ் தற்போது மணிரத்னம் தயாரிப்பில் உருவாகும் `வானம் கொட்டட்டும்’ படத்திலும், கண்ணன் இயக்கும் `நின்னு கோரி’ தமிழ் ரீமேக்கிலும் நடிக்கின்றார்.

தனது பட அனுபவங்கள் தொடர்பான பிரபல வார இதழான ஆனந்த விகடனுக்கு அவர் அளித்த பேட்டியில், `நின்னு கோரி’ தமிழ் ரீமேக்கிற்குள் தான் நடிக்க காரணம் சாந்தனு தான் என்கிறார். ‘வானம் கொட்டட்டும்’ படத்துடைய ஷூட்டிங்ல் நான் இருந்த போது, நானி, நிவேதா தாமஸ், ஆதி இவங்கள்லாம் நடிச்சிருந்த `நின்னு கோரி’ ங்கிற படம் தமிழ்ல ரீமேக் ஆகுது.

அதுல ஆதி நடிச்சிருந்த கேரக்டர் நீ பண்ணா நல்லாயிருக்கும். கண்ணன் சார்கிட்ட பேசிப்பாரு”னு சாந்தனு சொன்னார். அன்று இரவே படத்தைப் பார்த்துட்டு கண்ணன் சார்கிட்ட பேசினேன். அவர் ஒரு லுக் டெஸ்ட் எடுத்துப் பார்க்கலாம்னு சொன்னார். அவருக்கும் பிடிச்சிருந்தது.

ஸோ, அப்படியே படத்துக்குள்ள இணைந்துவிட்டேன். இப்ப ஜாலியாக போய்கிட்டு இருக்கு. இது எல்லாத்துக்கும் காரணம் சாந்தனு தான். அவருக்கு நன்றி என்று கூறியிருக்கிறார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

இத கண்டிப்பா படிங்க

To Top