கோல்கட்டா : இந்திய சூப்பர் ஸ்டாரான அமிதாப் பச்சனுக்கு அவரது ரசிகர்கள் கொல்கட்டாவில் கோவில் கட்டி 25 கிலோ எடையுள்ள அவரின் சிலையை நிறுவியுள்ளனர்.

இந்திய திரைப்பட ரசிகர்களுக்கு ஒருவரை பிடித்து விட்டால் அந்த நடிகர்களை கொண்டாடுவார்கள். தனது தலைவனின் படம் வெளியாகும் போது கட் அவுட் வைப்பது, பேனர் அடிப்பது, போஸ்டர் ஓட்டுவது , பாலாபிசேகம் செய்வது உள்ளிட்ட பணிகளில் ஈடுபடுவார்கள்.

அதிகம் படித்தவை:  நயனிடம் 4 ஆண்களின் கம்பீரம் இருக்கு.... எழுத்தாளர் புகழ் மாலை..!

இந்தநிலையில் மேற்கு வங்காள மாநிலம் கொல்கட்டாவில் இந்திய சூப்பர் ஸ்டாரான அமிதாப் பச்சனுக்கு அவரது ரசிகர்கள் கோவில் கட்டியுள்ளனர் . மேற்குவங்க அமிதாப் ரசிகர்கள் சங்கம் சார்பில், 6.2 அடிகொண்ட அவரின் சிலை, கொல்கத்தாவில் இருக்கும் அவரது கோயிலில் நிறுவப்பட்டுள்ளது.

அதிகம் படித்தவை:  கோலமாவு கோகிலா படத்தில் இருந்து ஒரே ஒரு ஊரில் சாங் வீடியோ.!

அமிதாப் பச்சனின் ‘சர்கார் 3’ திரைப்படம் வெள்ளிக்கிழமை வெளியானது இதையொட்டி, அனைத்து ‘சர்கார்’ திரைப்படத்தில் வரும் அமிதாப் கதாபாத்திரத்தைப் போலவே இந்தச் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது.