Connect with us

Cinemapettai

pulwama

India | இந்தியா

சொன்னதை செய்து முடித்த பிரபலம்..! 2500 விவசாயிகள் மற்றும் 41 CRPF வீரர்களுக்கு உதவி

பீகார் மாநிலத்தைச் சேர்ந்த சுமார் 2500 ஏழை விவசாயிகளை தேர்ந்தெடுத்து அந்த அனைத்து விவசாயிகளுக்கு அழைப்பு அவர்களுக்கு வங்கியில் கட்ட வேண்டிய கடன் தொகையை ஒரே தவணையில் கட்டியுள்ளார். அவர் தான் பாலிவுட்டில் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன்.

இதனை பலரும் பாராட்டி வருகின்றனர், அது மட்டுமில்லாமல் புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த 44 சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் குடும்பங்களுக்கும் உதவி செய்துள்ளார். இதைப் பற்றி அவரது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில் தங்கள் குடும்பத்தில் தூணாக இருந்த நபரை இழந்து குடும்பங்கள் சோகத்தில் இருப்பதாகவும். மேலும் அன்பான கணவர்கள், பெற்றோர்கள் தன் மகன்களை இழந்து இருப்பதாகவும் அதில் தெரிவித்துள்ளார்.

மேலும் நான் பார்த்த அனைத்து பெண்களும் மிகவும் சிறு வயதிலேயே கைக்குழந்தையுடன் அவர்களுக்கு இந்த சோகம் நடந்திருப்பதாகவும் கணவன் இறந்த சோகத்தில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

நாட்டிற்காக பாடுபட்டவர்களுக்கு ஏதாவது உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் தான் அந்த 44 குடும்பங்களுக்கும் தன்னால் முடிந்த பண உதவியை செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top