fbpx
Connect with us

Cinemapettai

அமித்ஷா தான் காரணம்.. போட்டுக்கொடுத்த எடியூரப்பா.. ஆடியோ லீக்! பெரும் சிக்கல்

Politics | அரசியல்

அமித்ஷா தான் காரணம்.. போட்டுக்கொடுத்த எடியூரப்பா.. ஆடியோ லீக்! பெரும் சிக்கல்

கர்நாடகாவில் காங்கிரஸ் – மஜத கூட்டணி ஆட்சியை கவிழ்த்து பாஜக ஆட்சிக்கு வந்தது. இதற்கு காரணமாக இருந்த 17 எம்.எல்.ஏக்கள் அமித்ஷாவின் கட்டுப்பாட்டில் தான் மும்பை ரிசார்ட்டில் தங்கியிருந்தனர் என்று எடியூரப்பா பேசுவது போன்ற ஆடியோ லீக் ஆனதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கர்நாடகாவில் `ஆபரேஷன் கமாலா’ என்ற ஒன்றை நடத்தி அனைத்து எம்.எல்.ஏ-க்களுக்கும் பணம் கொடுத்து பா.ஜ.க தங்கள் பக்கம் இழுத்துக்கொண்டதாகக் காங்கிரஸ் அப்போது இருந்தே குற்றம்சாட்டி வருகிறது. ஆனால், காங்கிரஸின் குற்றச்சாட்டை பாஜக தொடர்ந்து மறுத்துவந்தது.

இதற்கிடையில், ராஜினாமா செய்த 17 எம்.எல்.ஏ-க்கள் அனைவரும் கொறடாவின் உத்தரவை மீறியதாகக் கூறி அவர்களைத் தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் உத்தரவிட்டார்.

, தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ-க்களின் காலி இடங்களில் இடைத்தேர்தல் நடக்கவுள்ளதாகத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி டிசம்பர் மாதம் 5-ம் தேதி கர்நாடகாவில் இடைத்தேர்தல் நடக்க உள்ளது. அந்தத் தேர்தல் தொடர்பான ஆலோசனையில் சில நாள்களுக்கு முன்பு கர்நாடக பா.ஜ.க ஈடுபட்டது.

அந்தக் கூட்டத்தில் தன் கட்சி நிர்வாகிகளிடம் எடியூரப்பா பேசுகையில், “கர்நாடகாவில் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ள எம்.எல்.ஏ-க்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்த பிறகு, அவர்களை பா.ஜ.க தேசியத் தலைவர் தன் கட்டுப்பாட்டின் கீழ் மும்பையில் உள்ள ஒரு ஹோட்டலில் தங்கவைத்தார். ராஜினாமா செய்யவுள்ள எம்.எல்.ஏ-க்களைப் பற்றி அவர் முன்னதாகவே தெரிந்திருந்தார்.

இந்த முடிவை நான் எடுக்கவில்லை என்பது உங்களுக்குத் தெரியும். பா.ஜ.க தேசிய தலைவர்தான் இதில் தலையிட்டு அனைத்து ஏற்பாடுகளையும் செய்தார் என்று கூறியிருந்தார். இதனால் ஆத்திரத்தில் உள்ள காங்கிரஸ் எடியூரப்பா ஆட்சியை கலைக்க வேண்டும் என மனு அளித்துள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top