சனிக்கிழமை, டிசம்பர் 14, 2024

பாவனி ஜோடிக்கு மாமா வேலை பார்த்த விஜய் டிவி.. ரசிகர்களின் இந்த கொடுமையான கமெண்ட் ஏன் தெரியுமா?

விஜய் டிவியில் பிரபல நிகழ்ச்சியான பிக் பாஸ் சீசன் 5 இல் போட்டியாளராக பங்கு பெற்றவர்கள் பாவனி மற்றும் அமீர். ஆரம்பத்தில் அபிநய் உடன் கிசுகிசுக்கப்பட்ட பாவனி மன வருத்தத்தில் இருந்தார். அப்போது வையல் கார்டு என்ட்ரியாக வந்த அமீர் பாவனியுடன் நெருங்கி பழக ஆரம்பித்தார்.

அப்போது அமீர் தன் காதலை பாவனிடம் சொன்னார். ஆனால் பாவனி அமீருடன் நட்பாகத்தான் பழகி வந்தார். ஏற்கனவே கன்னட சீரியல் நடிகர் பிரதீப் குமார் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் பாவனி. ஆனால் திருமணமான 3 மாதத்தில் பிரதீப்குமார் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அதன்பின்பு சீரியலில் நடித்து வந்த பாவனிக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்நிலையில் பிபி ஜோடிகள் என்று பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரபலங்கள் ஜோடி சேர்ந்து நடனமாடும் நிகழ்ச்சி ஒன்று ஒளிபரப்பாகி வருகிறது.

இதில் பாவனி மற்றும் அமீர் இருவரும் இணைந்து ஆடி வருகின்றனர். அதில் அமீரின் ஆசையை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக விஜய் டிவி திருமண சுற்று என்று ஒன்று வைத்துள்ளது. இதில் பாவனி, அமீர் இருவரும் மணமக்கள் போல தயாராகியுள்ளனர்.

அதுமட்டுமல்லாமல் அமீர், பாவனி கழுத்தில் தாலி கட்டுகிறார். மேலும் மேடையில் திருமண சடங்குகளும் நடைபெறுகிறது. இதை பிரியங்கா முதல் மேடையில் உள்ள அனைவரும் உற்சாகமாக கொண்டாடுகின்றனர். ஏற்கனவே விஜய் டிவியில் ஒன்றாக பணியாற்றிய பல ஜோடிகள் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

இந்நிலையில் பாவனிக்கு விருப்பமில்லை என்றாலும் இது போன்ற நிகழ்ச்சிகளை டிஆர்பிகாக ஏற்பாடு செய்துள்ளது. இதனால் கண்டிப்பாக இந்த வார விஜய் டிவியின் டிஆர்பி எகிறும். மேலும் அடுத்த ஜோடிக்கும் விஜய் டிவி மாமா வேலை பார்த்துள்ளதாக ரசிகர்கள் கமெண்டுகளை தெரிக்கவிட்ட வருகின்றனர்.

- Advertisement -

Trending News