வெள்ளிக்கிழமை, டிசம்பர் 13, 2024

லிப் லாக் சீனை 3 நாட்களுக்கு இழுத்தடித்த அமீர்கான்.. என்னென்ன சேட்டைகள் செய்திருக்கிறார்

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகர்களாக இருக்கும் 3 கான்களில் ஒருவர் தான் அமீர்கான். இவர் மற்ற கான் நடிகர்கள் போல் இல்லை. வசூல் கொடுக்கும் படங்களை விட நல்ல கதைகளையே தேர்வு செய்து நடித்தார். ஆனால் சினிமாவின் ஆரம்ப காலத்தில் சிலபல சேட்டைகளையும் செய்துள்ளார்.

உதாரணத்துக்கு இஷக் படத்தில், படஹீரோயின் மீது எச்சில் துப்பியுள்ளார். அதற்க்கு வருத்தமோ, மன்னிப்பு கேட்கவோ இல்லை. இந்த நிலையில், தற்போது இவர் செய்த மற்ற ஒரு வேலை ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது. மேலும் பலர், “நல்லா வாழ்ந்துருக்க மேன் நீ.. உனக்கு அமையிது எங்களுக்கு அமையல” என்றும் நக்கல் செய்து வருகின்றனர். அப்படி என்ன வேலை பார்த்தார் என்று தெரிய வேண்டுமா?

3 நாட்கள் இழுத்தடித்த அமீர் கான்

இந்தி பட நடிகர் ஆமிர் கான் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்த ராஜா ஹிந்துஸ்தானி என்ற திரைப்படம் 1996 ஆம் ஆண்டு வெளியானது. இந்த படத்தில் அவருடன் கரிஷ்மா கபூர், அர்ச்சனா சிங் உள்பட பலர் நடித்திருந்தனர். மேலும் அந்த காலகட்டத்தில் அதிக பொருட்ச்செலவில் எடுக்கப்பட்ட படம் என்றே கூறலாம். சுமார் 5 கோடி பட்ஜெட்டில் இந்த படம் உருவாகியுள்ளது.

இந்த திரைப்படம் 27 ஆண்டுகளுக்கு முன்பே 75 கோடி வரை வசூலித்து சாதனை படைத்தது. இந்த படத்தை தர்மேஷ் தர்ஷன் இயக்கியிருந்தார். இந்நிலையில் இந்த படம் குறித்த சுவாரஸ்ய தகவல்களை தர்மேஷ் தர்ஷன் சமீபத்தில் அளித்த பேட்டியில் பகிர்ந்துள்ளார்.

ஹீரோயின் கரிஷ்மா கபூர் இந்த படத்திற்கு முன்பாக எந்த ஒரு முத்தக் காட்சிகளும் நடித்தது இல்லை. இதனால் ஆமிர் கான் உடனான முத்தக்காட்சியை படமாக்குவதற்கு அதிக டேக்குகள் வாங்கினாராம் கரிஷ்மா கபூர்.

அவர் சரியாக நடிக்கும்போது, அமீர்கான் சொதப்பிடுவாராம். அப்படி இருவரும் சேர்ந்து, 3 நாட்களுக்கு இந்த காட்சியை இழுத்தடித்துள்ளார்கள். ஒரே ஒரு லிப் லாக் சீனை மட்டும் எடுப்பதற்கு இயக்குனர் தர்மேஷ் 3 நாட்களாக ஷூட்டிங்கை நடத்தியிருக்கிறார். அதன் பின்னரே இயக்குனர் எதிர்பார்த்தபடி காட்சி அமைந்து நன்றாக வெளிவந்துள்ளது

- Advertisement -

Trending News