திங்கட்கிழமை, டிசம்பர் 9, 2024

நடிகை மீது எச்சில் துப்பிய அமீர்கான்.. என்ன கண்ராவி இது.. மன்னிப்பு கூட கேட்கலையாம்

பாலிவுட் சூப்பர் ஸ்டாரான ஷாருக்கானின் நெருங்கிய தோழியான ஜூஹி சாவ்லாவின் சொத்துமதிப்பு ரூ. 4 ஆயிரத்து 600 கோடி. சமீபத்தில் இவரது பிறந்தநாள் கொண்டாட்டங்கள் கோலாகலமாக நடந்து முடிந்துள்ளது. இந்த நிலையில் இவருக்கும் அமீர் கான்க்கும் ஏற்பட்ட ஒரு பிரச்சனையா பற்றி மனம் திறந்திருக்கிறார் அமீர் கான்.

பாலிவுட் நடிகை ஜூஹி சாவ்லா கல்லூரி ஃபேஷன் ஷோவால் மிஸ் இந்தியா அழகிப் போட்டியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. சும்மா ஜாலிக்காக அந்த போட்டியில் கலந்து கொண்ட ஜூஹி சாவ்லா மிஸ் இந்தியாவாக தேர்வு செய்யப்பட்டார். அதன் பிறகு பட வாய்ப்புகள் வரவே நடிகையாகிவிட்டார்.

இந்த நிலையில், இவர் 7 வருடமாக அமீர் கானுடன் பேசாமல் இருந்திருக்கிறார். அந்த அளவுக்கு, இரண்டு பேருக்கும் வெறுப்பு ஏற்பட்டுள்ளது. இந்த கதையை கேட்டால் கூத்தாக இருக்கும். என்ன அமீர் கான் இப்படியெல்லாம் நடந்திருக்கிறார்.. அவருக்கு நாகரீகம் தெரியாதா என்று கதையை கேட்ட பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும் ஒரு சிலர், ஜூஹி, அமீர்கானை பளார் என்று அறைந்திருக்க வேண்டும் என்ற அளவுக்கு கோவமாக கமெண்ட் செய்து வருகின்றனர்.

எச்சில் துப்பிய அமீர் கான்

இஷ்க் படத்தில் நடித்தபோது செட்டில் ஜூஹியை முட்டாளாக்கியிருக்கிறார் ஆமீர் கான். தனக்கு ஜோதிடம் தெரியும் என ஆமீர் கான் சொல்ல, அவரை நம்பி தன் கையை காட்டியிருக்கிறார் ஜூஹி. அப்போது அவர் ஜூஹியின் கையில் எச்சில் துப்பிவிட்டு ஓடிவிட்டார். இதை அவர் விளையாட்டாக செய்திருக்கிறார்.

ஆனால் ஜூஹிக்கு பயங்கரமாக கோபம் வந்துவிட்டது. இதனால், மறுநாள் படப்பிடிப்புக்கு வரவில்லை. அதன் பிறகு படப்பிடிப்புக்கு வந்தபோதிலும் ஆமீர் கானுடன் பேசவில்லை. ஆமீரும் ஜூஹி மீது கோபப்பட்டு பதிலுக்கு பேசவில்லை. நியாயமாக பார்த்தால், விளையாட்டாக செய்திருந்தாலும் ஒரு வார்த்தை சாரி கேட்டிருக்க வேண்டும். அதையும் இவர் செய்யவில்லை. தன் மீது தப்பு இல்லாதது போல நடந்துகொண்டுள்ளார். இதனால் 7 வருடங்கள் பேசாமல் இருந்திருக்கிறார்கள்.

இதை தொடர்ந்து, ஆமீர் கானுக்கும், அவரின் அப்போதைய மனைவியான ரீனாவுக்கும் விவாகரத்து நடக்கப் போகிறது என்பதை அறிந்ததும் போன் செய்து இருவரையும் பேசி சமாதான செய்ய முயற்சி செய்துள்ளார். ஆனால் அந்த முயற்சி தோல்வியில் முடிந்துள்ளது.

இதை தொடர்ந்து சமீபத்திய பேட்டி ஒன்றில், வருத்தம் தெரிவித்துள்ளார் அமீர் கான். அதில், “நானாவது பேசியிருந்திருக்கணும், பேசாமல் போய்விட்டேன்” என்று கூறியுள்ளார். அப்போ கூட மன்னிப்பு கேட்கவில்லை.

- Advertisement -

Trending News