India | இந்தியா
அனல் பறக்கும் அதிபர் விவாதம்.. அதிரடியாக முடிவெடுத்த அமெரிக்க வாழ் தமிழர்கள்!
தற்சமயம் அமெரிக்காவில் நடக்கவிருக்கும் அதிபர் தேர்தலுக்காக டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ஜோ பைடன் ஆகியோர் போட்டியாளர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான போட்டியாளர்களுக்கு இடையே மூன்றாவது நேரடி விவாதம் இன்று டென்னசி மாநிலத்திலுள்ள நாஷ்வில் நடைபெற்றது.
மேலும் இந்த விவாதம் குறித்து அமெரிக்க வாழ் இந்தியர்கள் பிரபல செய்தி தொலைக்காட்சியிடம் தங்களது கருத்துக்களை பகிர்ந்துள்ளனர்.
அதாவது அதிபர் தேர்தலுக்கான முதல் விவாதத்தில் இருவரும் ஈடுகட்டி மோசமாக பேசியதால் சரியாக நடக்கவில்லை என்றும், இரண்டாவது விவாதம் டொனால்ட் ட்ரம்ப் கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டதால் நடைபெறவில்லை என்றும் அமெரிக்க வாழ் தமிழர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் அவர்கள், மூன்றாவது விவாதத்தில் கட்டுப்படுத்தப்பட்ட மைக்குகள் வைக்கப்பட்டதால் இன்றைய விவாதம் ஒழுங்கான முறையில் நடந்ததாகவும், ட்ரம்ப் வழக்கம்போல் பல குற்றச்சாட்டுகளை அடுத்தடுத்து ஜோ பைடன் மேல் வைத்தாலும், ஜோ பைடன் கோபப்படாமல் தான் சொல்ல வந்த கருத்தை அச்சுப் பிசகாமல் கூறியது பாராட்டுக்குரியது என்று தெரிவித்தனர்.
எனவே, இந்த மூன்றாவது விவாதம் கடந்த விவாதத்தை காட்டிலும் அதிபர் டிரம்ப் தன்மையாக எதிர் கொண்டதாகவும், கருத்துக்களின் அடிப்படையில் ஜோ பைடன் வெற்றி பெற்றதாகவும் தெரிவித்துள்ளார் அமெரிக்க வாழ் இந்தியரான சோ சங்கரபாண்டி.
இவரை அடுத்து பேட்டியளித்த மணி குமரன், இந்த விவாதம் ஆக்கப்பூர்வமான விவாதமாக இருந்தது என்றும், அமெரிக்கா எதை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறது என்பதை இரண்டு வெவ்வேறு பார்வைகள் முன் வைக்கும் வகையில் இந்த விவாதம் அமைந்திருந்தது என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.
எனவே சூடு பிடித்த படி ஓடும் அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி யாருக்கு என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

joe-biden
