தமிழகத்தில் நிலவும் அசாதரண சூழலும், அதிகாரச் சண்டையும், உலக அரங்கில் பெரும் தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளதாக இயக்குநர் அமீர் வேதனை தெரிவித்துள்ளார்.

மதுரையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய இயக்குநர் அமீர், தமிழகத்தில் நடைபெற்று வரும் நீயா? நானா?போட்டி பல்வேறு கேள்விகளை ஏற்படுத்தியுள்ளதான தெரிவித்தார்.

பொது மக்களின் கடுமையான எதிர்ப்புகளுக்கிடையே சசிகலா ஏன் முயற்சி செய்கிறார் என கேள்வி எழுப்பினார்.ஓபிஎஸ் ராஜினாமா செய்யும்போது பேசாமல் இருந்து விட்டு, தற்போது என்னை நிர்ப்பந்தம் செய்தார்கள் என கூறுவது சரியில்லை எனவும் தெரிவித்தார்.

அரசியல் சாசனப்படி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட என்எல்ஏக்கள் ஆதரவு யாருக்கு உள்ளதோ அவர்களை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைக்க வேண்டும் எனவும் அமீர் கேட்டுக் கொண்டார்.

ஆனால் ஆளுநர் இதை வேடிக்கை பார்த்துக் கொண்டு சும்மா இருப்பது மத்திய பாஜக அரசின் தலையீடு இருக்கிறதோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சசிகலாவை முதலமைச்சராக அறிவிப்பதில் என்ன சட்ட சிக்கல் உள்ளது என்பதை ஆளுநர் தெளிவு படுத்த வேண்டும் என்றும் அமீர் கேட்டுக் கொண்டார்.

இல்லை என்றார் சசிகலாவும், ஓபிஎஸ்ம் தேர்தலை சந்திக்க தயாராக உள்ளார்களா என கேள்வி எழுப்பினார். தற்போது தமிழகத்திற்கு அவசரமாக ஒரு முதலமைச்சர் தேவைப்படுகிறார் என்பதே உண்மை என்றும் அமீர் குறிப்பிட்டுள்ளார்.