ஜல்லிக்கட்டு விவகாரத்தில் ஆதரவு தெரிவித்து வந்த இயக்குநர் அமீர், சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட சில இடங்களில் நடந்த வன்முறை சம்பவம் தொடர்பாக மதுரையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அமீர் பேசுகையில்… ஜல்லிக்கட்டு போராட்டம் நேற்று மாலையுடன் முடிந்து விட்டது. இதனை மாணவர்கள், இளைஞர்கள் புரிந்துகொள்ள வேண்டும். சில அமைப்புகள் மாணவர்களை மீண்டும் போராட்ட களத்திற்கு அழைப்பு விடுத்து வருகின்றனர்.

சமூக வலைதளங்களில் வரும் செய்திகளை மாணவர்கள் நம்பாதீர்கள். மதுரை போராட்டத்தில் உதவி செய்வது போன்று சிலர் உள்ளே வந்துள்ளனர். சமூக விரோதிகள் இருந்ததற்கு மாணவர்களை குற்றம் சொல்ல முடியாது. பெண்கள், கர்ப்பிணகளை போலீசார் தாக்கியது கண்டிக்கத்தக்கது. தமிழகத்தை கலவர பூமியாக மாற்றிவிடாதீர்கள். அலங்காநல்லூரில் கைது செய்யப்பட்டுள்ள 32 பேர் மீது வழக்கு போட்டுள்ளதாக செய்தி பார்த்தேன், தமிழக அரசு பெருந்தன்மையுடனும், கருணையோடும் அவர்களை விடுவிக்க வேண்டும்.