ameer

புதிய தலைமுறை சேனல் விவாதத்தில் பங்கு பெற்ற அமீர் கேட்ட சில கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள் லாரன்ஸ், இசையமைப்பாளர் ஆதி, ஆர்.ஜே.பாலாஜி உள்ளிட்ட சிலர். விவாதத்தில் அமீர் கேட்டதென்ன?

இந்த மாணவர் மற்றும் இளைஞர் கூட்டம் ஆரம்பத்திலிருந்தே அரசியல்வாதிகளையும் சினிமாக்காரர்களையும் உள்ளே விடக் கூடாது என்பதில் தெளிவாக இருந்தது. நாங்களும் எங்கள் ஆதரவை தெரிவிக்கப் போயிருந்தோம். மதுரை, அலங்காநல்லூர், சென்னை ஆகிய இடங்களில் எங்கள் ஆதரவை தெரிவித்துவிட்டு திரும்பிவிட்டோம். ஆனால் இவர்கள் மூவரும் அங்கேயே தங்கியிருந்தது ஏன்?

அதிகம் படித்தவை:  நயன்தாரா - அனிருத் இணைந்து கலக்கும் - "கன் இன் காதல்" பாடல் வீடியோ - கோலமாவு கோகிலா !

அதுவும் இசையமைப்பாளர் ஆதி, தான் இசையமைத்த பாடல்களை அங்கு திரண்டிருந்த இளைஞர் கூட்டத்தின் முன் பெரிய எல்.இ.டி ஸ்கிரின் வைத்து தொடர்ந்து ஒளிபரப்பிக் கொண்டேயிருந்தார். இந்த சுய விளம்பரத்திற்காக ஏன் இந்த இளைஞர் கூட்டத்தை பயன்படுத்திக் கொண்டார்? இதற்காக பல லட்ச ரூபாய் செலவாகியிருக்கும். அது எங்கிருந்து வந்தது?

அதிகம் படித்தவை:  அஜித் பட நடிகைக்கு காரில் பாலியல் தொல்லையா.? இதோ அவரே கூறிய தகவல்

அது மட்டுமல்ல… இளைஞர் கூட்டத்தில் சமூக விரோதிகள் புகுந்துவிட்டார்கள் என்பதை உளவுத்துறையே மறுநாள்தான் சொன்னது. ஆனால் அதற்கு முதல் நாளே ஆதியும் லாரன்சும் ஆர் ஜே.பாலாஜியும் சமூக விரோதிகள் புகுந்துவிட்டதாக கூறியது எப்படி? இவர்கள் உளவுத்துறையை விட நுணுக்கமானவர்களா? என்றெல்லாம் ஆவேசமாக கேள்வி எழுப்பினார்.