Tamil Cinema News | சினிமா செய்திகள்
அஜித் பட இயக்குனர், ரஜினிக்காக உருவான டைட்டில்.. வைரலாகுது அமீரின் அரசியல் பட போஸ்டர்
மௌனம் பேசியதே, ராம், பருத்தி வீரன் படங்களை இயக்கியவர் அமீர். யோகி படம் வாயிலாக நடிகர் அவதாரம் எடுத்தார். வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷின் ‘வட சென்னை’ படத்தில் ராஜன் கதாபாத்திரத்தில் நடித்து கலக்கியவர். முகவரி, தொட்டி ஜெயா, விரைவில் வெளியாகும் இருட்டு போன்ற படங்களை இயக்கியவர் வி.இசட்.துரை.
இவர் இயக்கும் நாற்காலி படத்தில் அமீர் ஹீரோ. அரசியல்வாதி ரோல். மூன் பிக்சர்ஸ் ஆதம் பாவா தயாரிக்கிறார். படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளது. மேலும் ஃபர்ஸ்ட் லுக்கும் வெளியாகி உள்ளது. கட்டை விரலைத் தவிர மற்ற விரல்களில் மோதிரம் அணிந்து, கையெடுத்து கும்பிடுவது போன்று இந்த போஸ்டர் லைக்ஸ் குவித்து வருகின்றது.

ameer in narkalai
சில வருடங்களுக்கு முன் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் பட தலைப்பு நாற்காலி என கிசு கிசுக்கப்பட்டது.
#Rajinikanth #Politics #SuperStar #TNPolitics #ARMurugadoss #LycaProductions #Narkaali #Rajini #Tamilnadu pic.twitter.com/eFo8d41YR3
— Factstone (@FactstoneNews) January 9, 2019
