படம் முழுக்க ராஜன் கேரக்டர் தான் இருக்கு.. வெற்றிமாறனுக்கு தனுஷ் கொடுத்த நெருக்கடி

தமிழ் சினிமாவில் நடிகராகவும், இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் வலம் வந்து கொண்டிருப்பவர் அமீர். இவர் நடிப்பில் 2018 ஆம் ஆண்டு வெளியான வடசென்னை திரைப்படத்தின் ராஜன் கதாபாத்திரம் மூலமாக மக்களை கவர்ந்தவர். இயக்குனர் பாலாவிடம் சேது மற்றும் நந்தா திரைப்படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றினார்.

இந்த நிலையில் 2001ஆம் ஆண்டு நடிகர் சூர்யாவின் நடிப்பில் வெளியான மௌனம் பேசியதே திரைப்படத்தின் மூலமாக இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன் பின்னர் நடிகர் ஜீவாவின் ராம் திரைப்படத்தை இயக்கி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அதற்கு பின்னால் அமீரின் திரை வாழ்க்கையில் புரட்டிப்போட்ட திரைப்படமாக 2007 ஆம் ஆண்டு வெளியான பருத்திவீரன் திரைப்படம் பார்க்கப்பட்டது. நடிகர் கார்த்தி அறிமுகமா இந்த திரைப்படம் தமிழ் சினிமா ரசிகர்களை மட்டுமின்றி இந்திய அளவிலும் பெரும் அளவில் பேசப்பட்டது.

இந்த படத்தில் நடித்த நடிகை பிரியாமணிக்கு தேசிய விருதும் வழங்கப்பட்டது. இந்த படத்தின் வெற்றியை அனைவருக்கும் கொண்டாட்டமாக இன்றளவும் அமைந்துள்ளது. அதற்கு காரணம் அமீரின் இயக்கம்தான். அதற்கு பின்னர் 2009ஆம் ஆண்டு யோகி திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகி அமீர் நடித்தார். அந்த திரைப்படத்தின் கதை ரசிக்கும் படியாக அமைந்தாலும் அந்த திரைப்படம் பெரும் அளவில் வெற்றிபெறவில்லை.

மேலும் அமீர் இயக்கிய 3 திரைப்படத்திற்கும் இசை அமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருப்பார். அமீரின் விடா முயற்சி காரணமாக பல திரைப்படங்களில் நடித்து வந்தார் அமீர். அதன்பின்னர் 2018 ஆம் ஆண்டு மீண்டும் அவரின் திரை வாழ்க்கையை புரட்டிப் போட்ட சம்பவமாக வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்த வடசென்னை திரைப்படம் உருவானது.

இந்த படத்தின் வெற்றியை ரசிகர்களுக்கு சொல்லவே வேண்டாம். அந்த அளவு இந்த படத்தின் வெற்றி அந்த ஆண்டுக்கான மிகப் பிரம்மாண்டமான படமாகப் பார்க்கப்பட்டது. இந்த நிலையில் வட சென்னை 2 திரைப்படத்திற்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். தற்போது ஒரு பேட்டி ஒன்றில் வடசென்னை படத்தை பற்றி பேசிய அமீர் இந்த திரைப்படத்தில் ராஜன் கதாபாத்திரத்தை 55 நிமிடங்கள் வெற்றிமாறன் எடுத்திருந்தார். இதைப் பார்த்த தனுஷ் படம் முழுக்க ராஜன் கதாபாத்திரமாக இருப்பதாக வெற்றி மாறனிடம் தெரிவித்துள்ளார், இதனால் மீண்டும் சில நிமிடங்களை குறைத்துள்ளார் வெற்றிமாறன். கடைசியில் முப்பத்தி ஐந்து நிமிடங்கள் மட்டுமே காட்சிப்படுத்தினார்.

அந்த அளவிற்கு இந்த கதாபாத்திரம் முக்கியமானதாக அமைந்தது என்றும் அமீர் தெரிவித்தார். இன்னும் இந்த கதாபாத்திரம் பேசப்பட வேண்டும் என்பதற்காக வட சென்னை பார்ட் -2 உருவாக உள்ளதாகவும் தெரிவித்தார். அதுமட்டுமின்றி சந்திரா, அன்பு, பத்மா உள்ளிட்ட அனைத்து கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் வெற்றிமாறன் இயக்கி இருந்தார். இந்த நிலையில் நடிகர் விஜய்சேதுபதிக்கு ரீப்ளேசாக அமீர் திரை உலகில் கால் பதித்து விட்டார் என்ற செய்திகள் வெளியானது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அமீர், அவர் நடித்திருந்தால் என்னை விட பிரம்மாண்டமாக நடித்திருப்பார்.

ஆனால் இந்த விமர்சனத்தை ஏற்க எனக்கு விருப்பமில்லை. ஒவ்வொரு நடிகருக்கும் ஒரு தனித்துவம் உள்ளது. விஜய் சேதுபதி வளர்ந்து வரும் முக்கியமான நடிகர் அவர் தன் திறமையை ஒவ்வொரு படத்திலும் காட்டி வருகிறார். நான் வடசென்னை திரைப்படத்தில் ராஜன் கதாபாத்திரத்தில் காட்டியிருக்கிறேன். இதில் கம்பேர் செய்து பார்ப்பது எனக்கு சரியாகப்படவில்லை என பளிச்சென்று பேட்டியளித்துள்ளார். வடசென்னை 2 திரைப்படத்தில் நடிகர் தனுஷுடன் அமீர் இணைந்து நடிக்கும் காட்சிகளை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்து கொண்டிருக்கின்றனர்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்