அதிமுக எம்.எல்.ஏக்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ள கூவத்தூர் ரிசார்ட்டுக்கு ஆம்புலன்ஸ் ஒன்று போயுள்ளது.

கூவத்தூர் கோல்டன் பே ரிசார்ட்டில் அதிமுக எம்.எல்.ஏக்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு மது விருந்து உள்பட அனைத்தும் செய்து தரப்படுகிறது. சிறையில் அடைக்கப்பட்டுள்ளகைதிகளின் நிலையில் அவர்கள் உள்ளனர். அவர்களில் பலருக்கு சர்க்கரை வியாதி உள்ளிட்ட உடல் உபாதைகளும் உள்ளன.

இந்த நிலையில் அங்கு தற்போது ஒரு ஆம்புலன்ஸ் வந்துள்ளது. 2 டாக்டர்களும் தனி காரில் வந்துள்ளனர். எதற்காக இது என்று தெரியவில்லை. யாருக்கும் ஏதேனும் ஆகி விட்டதா என்ற பரபரப்பும் ஏற்பட்டுள்ளது.