டிராபிக் ராமசாமி படத்தில் என் கனவு நிஜமானது – நடிகை அம்பிகா.

ரியல் ஹீரோவான சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி பற்றி ‘டிராபிக் ராமசாமி’ என்ற பெயரிலேயே ஒரு படம் தயாராகி வருகிறது. இந்த படத்தில் டிராபிக் ராமசாமியாக எஸ்.ஏ.சந்திரசேகரன் நடிக்கிறார். அவரது மனைவியாக ரோகிணி நடிக்கிறார். ஆர்.கே.சுரேஷ், உபாசனா அம்பிகா லிவிங்ஸ்டன், இமான் அண்ணாச்சி நடிக்கின்றனர். சினிமா நடிகராக விஜய் ஆண்டனி நடிக்கிறார். விஜய் விக்ரம் இயக்குகிறார்.

விஜய் விக்ரம் எஸ்.ஏ.சந்திரசேகரிடம் உதவி இயக்குநராக பணியாற்றி யவர் பாலு முரளி இசை, குகன்.எஸ்.பழனி ஒளிப்பதிவு. பிரபாகர் படத்தொகுப்பு. ஈரோடு மோகன் என்பவர் தயாரிப்பளார்.

வளர்ந்து வரும் ‘டிராபிக் ராமசாமி’ படம் தன் கனவை நிறைவேற்றியிருப்பதாக நடிகை அம்பிகா தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் கூறியிருப்பதாவது…

“நான் கடந்த 30 ஆண்டுகளாக தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் 250-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளேன். இதுவரை எவ்வளவோ பாத்திரங்களில் நடித்திருக்கிறேன். ஆனால், செண்டிமெண்டோடு கலந்த நகைச்சுவையான ஒரு கேரக்டரில் நடிக்க வேண்டுமென்பது என் நீண்ட நாள் ஆசையாகவும், கனவாகவும் இருந்தது. இந்த ‘டிராஃபிக் ராமசாமி’ என்கிற படத்தின் மூலம் என்னுடைய அந்தக் கனவு நிறைவேறி இருக்கிறது.

‘நான் சிகப்பு மனிதன்’ படத்தில் ஒரு வக்கீல் வேடத்தில் நடித்தேன். அப்படத்தை எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கி இருந்தார். சுமார் முப்பது வருடங்கள் கழித்து அவர் நடிக்கும் ‘டிராபிக் ராமசாமி’ என்கிற படத்தில் பதவி உயர்வு பெற்று நீதிபதியாக நடிக்கிறேன். இது கதையோடு கலந்த நகைச்சுவை பாத்திரம். எனக்கு இது மிகவும் புதுமையான, மாறுபட்ட நடிப்பு அனுபவமாக இருந்தது. ஒரு வகையில் என் நீண்ட நாள் கனவு நிறைவேறிய திருப்தி வந்துள்ளது. அந்த கதாபாத்திரத்தில் நான் மிகுந்த ஈடுபாட்டோடு நடித்து இருக்கிறேன். இந்தப் படத்தை விஜய் விக்ரம் இயக்குகிறார்.’’ என்று கூறியுள்ளார்.

Comments

comments