fbpx
Connect with us

Cinemapettai

இந்திய டீம்மில் சேர்க்கப்படாததன் விரக்தியை காமெடி ஸ்டேட்டஸ் வாயிலாக பதிவிட்ட அம்பத்தி(த்ரீ) ராயுடு. 60000 லைக்ஸ் கடந்து வைரலாகுது.

News | செய்திகள்

இந்திய டீம்மில் சேர்க்கப்படாததன் விரக்தியை காமெடி ஸ்டேட்டஸ் வாயிலாக பதிவிட்ட அம்பத்தி(த்ரீ) ராயுடு. 60000 லைக்ஸ் கடந்து வைரலாகுது.

மே 30-ம் தொடங்கி ஜூலை 14-ம் தேதி வரை இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் உலகக்கோப்பை நடைபெற உள்ளது, தேர்வான இந்திய வீரர்கள் பட்டியலை பிசிசிஐ அறிவித்தது.

கிட்டத்தட்ட முன்பே மெஜாரிட்டி வீரர்கள் முடிவான நிலையில் சில இடங்களுக்கு தான் இந்திய டீம்மில் போட்டி இருந்தது. அம்பத்தி ராயுடு, மற்றும் ஸ்டார் பிளேயர் ஆனா ரிஷப் பண்ட் இருவருக்கும் இடம் கிடைக்கவில்லை. மேலும் கே எல் ராகுல், தினேஷ் கார்த்திக் மற்றும் விஜய் ஷங்கர் சேர்க்கப்பட்டுள்ளனர் டீம்மில்.

தேர்வாளர் MSK பிரசாத் பிரஸ் இடம் கூறியதன் தொகுப்பு ..

நம்பர் நான்கில் ஆட நிர்வாகம் அம்பத்தி ராயுடு, பண்ட், கார்த்திக், விஜய் ஷங்கர் மற்றும் முன்பு மனிஷ் பாண்டே, ஸ்ரேயாஸ் ஐயர் என பலரை முயற்சித்தனர். மேலும் தோனி, ராகுல், ஜாதவ் கூட ஆடலாம் என பேசப்பட்டதாம்.

விஜய் ஷங்கர் முப்பரிமாணம் உள்ள வீரர் என்பதால் ராயுடுவுக்கு பதில் அவருக்கு வாய்ப்பு சென்றுள்ளது. அருமையான பீல்டர், நல்ல பேட்ஸ்மான் அதுமட்டுமன்றி பந்துவீச்சும் பிளஸ். குறிப்பாக மேக மூட்டம், மழை போன்ற சமயங்களில் நல்ல உதவிகரமாக இருக்கும். தோனி, ஜாதவ், கார்த்திக் என்று இருந்தாலும் தொடர் ஆரம்பத்தில் விஜய் ஷங்கர் நான்கில் ஆடும் வாய்ப்பே அதிகம்.

Ambati Rayudu

அவர் கூறிய 3 dimensional வீரர் ஷங்கர் என்பதனை கிண்டல் செய்யும் விதமாக; தான் உலகக்கோப்பையை பார்க்க 3 D கண்ணாடி ஆர்டர் செய்ததாக பதிவிட்டுள்ளார் நம் சி எஸ் கே வின் பாகுபலி. இந்த ஸ்டேட்டஸ் லைக்ஸ் குவித்துள்ளது.

பலரும் ராயுடுவுக்கும் ஆதரவும் ஹார்ட் லக் என சொல்லியும் ஸ்டேட்டஸ் பதிவிட்டு வருகின்றனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top