Sports | விளையாட்டு
உலகக் கோப்பை போட்டியில் இருந்து விலக்கப்பட்டதால் ஓய்வு தெரிவித்த வீரர்.! காரணம் யார் என்று தெரிந்தால் ஷாக் ஆய்டுவீங்க
உலக கோப்பை போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு வீரர்களும் தங்கள் அணி வெற்றி பெறுவதற்கு சிறப்பாக விளையாடி வருகின்றனர். ஒரு சில போட்டிகளில் காயம் ஏற்பட்டதை அடுத்து ஷிகர் தவான், புவனேஷ்குமார் போட்டியிலிருந்து விளையாடாமல் ஓய்வு பெற்றனர்.
ஷிகர் தவான் பதிலாக அம்பத்தி ராயுடு விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவருக்கு பதிலாக ‘விஜய் சங்கர்’ தேர்ந்தெடுத்தனர். அதற்கு அம்பத்தி ராயுடு கிண்டல் செய்யும் விதமாக த்ரீடி க்ளாஸ் கொடுங்கள் என ட்விட் செய்திருந்தார். அதற்கு பலரும் கோபத்தை வெளிப்படுத்தினர்.
அம்பத்தி ராயுடு 2013ம் ஆண்டு ஜிம்பாப்வேவுக்கு எதிரான போட்டியில் அறிமுகமானார். மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஆக சிறப்பாக விளையாடி வந்தார். இந்திய அணிக்காக 55 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 3 சதம், 10அரை சதம் அடித்து 1694 ரன்கள் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் தற்போது சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
அம்பத்தி ராயுடு ஓய்வு பெறுவதற்கு காரணமாக இருப்பவர்கள் ரவி சாஸ்திரி மற்றும் விராட் கோலி ஏனென்றால் இவர்கள் இருவரும் அம்பத்தி ராயுடு போட்டியில் விளையாட அனுமதிக்காததால் தான் அவர் ஓய்வை அறிவித்து உள்ளதாக கூறியுள்ளனர்.
சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.
