தன் ஓய்வை கான்சல் செய்துவிட்டு ஆட வரும் சி எஸ் கே வீரர் – பாகுபலி 3.0 ரெடி

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் தேர்ந்தெடுக்கப்படாத சூழலில், தேர்வாளர்களை கலாய்த்து 3d ஸ்டேட்டஸ் பதிவிட்டார் அமபத்தி ராயுடு. எனினும் ஸ்டாண்ட் பை வீரராக இருந்தார். எனினும் தவான், விஜய் ஷங்கர் காயம் அடைந்த பின்பு கூட பண்ட் மற்றும் அகர்வாலுக்கு தான் வாய்ப்பு அமைந்தது. இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை என்ற சூழலில் தனது ஒய்வை திடீரென அறிவித்து அதிர்ச்சி கொடுத்தார்.

ஐஸ்லாந்து கிரிக்கெட் அணியில் ஆடப்போகிறார், உலகெங்கும் உள்ள டி 20 லீக்கில் ஆடுவார் என்றெல்லாம் பேசப்பட்டது. ஆனால் தற்பொழுது தன் ரிட்டையர்மண்ட் பற்றி யூ – டர்ன் எடுத்துள்ளார். மனிதர் மீண்டும் கிரிக்கெட் ஆட வந்துள்ளார். தமிழ் நாடு கிரிக்கெட் அசோசியேஷன் லீக்கில் ஆடி வருகிறார். கிராண்ட் ஸ்லாம் அணிக்காக 47 ரன்களும் அடித்தார் கடந்த வியாழன் அன்று.

நேற்று செய்தியாளர்களிடம் பேசினார். அதன் சாராம்சம் இதோ ..

“உலகக் கோப்பையில் இந்தியாவிற்காக விளையாட கடந்த 4 வருடங்களாக கடுமையாகப் பயிற்சி செய்து வந்தேன். நான் தேர்வு பெறவில்லை என்றதும் ஏமாற்றம் அடைந்தேன். எனவே ஓய்வுக்கு சரியான தருணம் என நினைத்து முடிவை அறிவித்தேன். அது உணர்ச்சிவசப்பட்டு எடுத்த முடிவு என கூற மாட்டேன். அதிகமாக எதிர் பார்த்திருந்த ஒன்று கிடைக்கவில்லை என்பதால் எடுத்த முடிவு.

CSK – Ambathi Rayudu

இப்பொழுது அதுபற்றி யோசிக்க நேரம் கிடைத்தது. இன்னும் சில வருடங்கள் விளையாடலாம் என முடிவு செய்துள்ளேன். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் எப்பொழுதுமே எனக்கு ஆதரவளித்து வந்துள்ளது. அந்த அணி நிர்வாகமும் என்னிடம் பேசி வந்தது. கண்டிப்பாக சி எஸ் கே அணிக்காக வரும் ஐபில் 2020 ஆடுவேன். அதற்கு முன் என் உடல் தகுதியை சரி செய்துகொள்ள இருக்கிறேன்.” என கூறியுள்ளார்.

விரைவில் தனது ஓய்வை ரத்து செய்வது பற்றி கிரிக்கெட் வாரியத்துக்கு கடிதம் எழுத உள்ளாராம் ராயுடு.

Leave a Comment