fbpx
Connect with us

Cinemapettai

டாய்லெட்டில் விநாயகர்,சிவன் படம்..! திமிர் எடுத்து அலையும் அமேசான் நிறுவனம்..

India | இந்தியா

டாய்லெட்டில் விநாயகர்,சிவன் படம்..! திமிர் எடுத்து அலையும் அமேசான் நிறுவனம்..

மதக் கலவரத்தை உண்டாக்கும் வகையில் அமேசான் நிறுவனம் தற்போது சில பொருட்களை ஆன்லைனில் விற்பதற்காக வெளியிட்டுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

அமேசான் நிறுவனம் அமெரிக்காவை தலைமை இடமாகக் கொண்டு பன்னாட்டு இணைய வணிகம் நடத்தி வருகிறது. இந்த நிறுவனம் அவ்வப்போது பல சர்ச்சைகளில் சிக்குவது வழக்கமாக கொண்டுள்ளது. உலகத்தில் எந்த இடத்தில் இருந்தாலும் அமேசான் மூலம் பொருட்களை பெற்றுக் கொள்ளலாம்.

அந்த வகையில் அமேசான் நிறுவனத்தின் இணையதளத்தில் சில தினங்களுக்கு முன் இந்து கடவுள் ஸ்டிக்கர்களை, டாய்லெட் பேப்பர் களாகவும், டாய்லெட் மூடிகளாகவும் மற்றும் கால் மிதியடிகளில் காந்தி படத்தை ஒட்டி விற்பனைக்கு என்று புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.

இதனையடுத்து நொய்டாவை சேர்ந்த விகாஸ் என்பவர் அமேசான் நிறுவனத்தின் மீது காவல் நிலையத்தில் புகார் ஒன்றை கொடுத்துள்ளார்.

புகாரில் அமேசான் நிறுவனம் வெளியிட்டு விற்பனையாகும் புகைப்படங்கள் இந்து மத உணர்வை பெரிதும் புண்படுத்தி உள்ளதாகவும், இது நாட்டில் எப்போது வேண்டுமானாலும் மத கலவரத்தை உண்டாக்கும் வகையில்  உள்ளதாகவும் கூறியுள்ளார்.

இதனை அடுத்து அமேசான் நிறுவனத்தின் மீது மத உணர்வை புண்படுத்தும் தொடர்பான பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இது மட்டுமல்லாமல் அமேசான் நிறுவனத்தைக் கண்டித்து ட்விட்டர் ட்ரெண்ட்டிங்கில் #boycottamazon எனும் ஹேஷ்டேக்கை உருவாக்கி வருகின்றனர்.

amazon

amazon

amazon

amazon

amazon

amazon

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top