பொன்னியின் செல்வன் ஓடிடி உரிமையை வாங்கிய பிரபல நிறுவனம்.. தலையை சுற்றவைக்கும் கோடிகள்

இயக்குனர் மணிரத்னம் கனவு படம் தான் பொன்னியன் செல்வன். இப்படம் இரண்டு பாகங்களாக உருவாகி உள்ளது. பொன்னியின் செல்வன் என்ற நாவலை மணிரத்தினம் படமாக எடுக்கிறார். இதனால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து இருந்தது.

மேலும் இப்படத்தில் ஒரு திரைபட்டாளமே நடித்துள்ளது. அதாவது பிரகாஷ்ராஜ், பார்த்திபன், சரத்குமார், நாசர், பிரபு, நிழல்கள் ரவி, கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, விக்ரம் பிரபு, ரியாஸ்கான், ஐஸ்வர்யா ராய், அஸ்வின், அர்ஜுன் சிதம்பரம், ரகுமான், மோகன்ராம் போன்ற பல பிரபலங்கள் இதில் நடித்துள்ளனர்.

மேலும் பொன்னியின் செல்வன் படம் மிகப் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகி உள்ளது. இப்படத்திற்கு இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் செப்டம்பர் 30ஆம் தேதி வெளியாக உள்ளது.

இந்நிலையில் பொன்னியின் செல்வன் படம் ஒடிடி நிறுவனத்திற்கு விலை பேசபட்டதாக தகவல் வெளியானது. அமேசான் பிரைம் வீடியோ சுமார் 125 கோடிக்கு பொன்னியின் செல்வன் படத்தை கைப்பற்றியுள்ளது என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

மேலும் இப்படம் திரையரங்குகளில் வெளியான பின்பு ஒடிடியில் ரிலீஸ் செய்ய தான் இந்த தொகை பேசப்பட்டுள்ளது. மேலும் இப்படத்தின் இரண்டு பாகங்களும் சேர்த்து சுமார் 500 கோடி பட்ஜெட் என கூறப்படுகிறது. தற்போது பொன்னியின் செல்வன் படத்திற்கான இறுதிக்கட்ட வேலைகள் நடைபெற்று வருகிறது.

இப்படத்தின் எடிட்டிங் மற்றும் மியூசிக் போன்ற பணிகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. ஒட்டுமொத்த சினிமா பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளதால் இப்படத்தை காண ரசிகர்கள் ஆர்வமாக இருக்கின்றனர். மிக விரைவில் இப்படத்திற்கான அடுத்த அப்டேட் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story

- Advertisement -