அண்ணாச்சியை அசிங்கப்படுத்திய அமேசான்.. இப்படி ஒரு நிலை எதிரிக்குக் கூட வரக்கூடாது.

தி லெஜண்ட் பட ஹீரோ அருள் சரவணனுக்கு அமேசான் நிறுவனம் போட்ட கட்டளையால் ஆடி போயிருக்கிறார். சினிமாவில் இவருக்கு இது தான் முதல் படம் என்றாலும் வணிக ரீதியாக பார்த்தால் பல தலைமுறைகளாக பேர் வாங்கிய இவர் இப்போது அமேசானிடம் மாட்டிக்கொண்டு தவித்து கொண்டிருக்கிறார்.

சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரங்களில் நடிகர், நடிகைகளை வைத்து ப்ரமோஷன் பண்ணிக்கொண்டிருந்த இவர் முதன் முதலில் தன்னுடைய கடை விளம்பரங்களில் நடிக்க ஆரம்பித்தார். அதன் பின்னர் இவர் படங்களில் நடிக்க இருப்பதாக தகவல்கள் பரவின. பின்னர் தி லெஜண்ட் மூவியும் ரிலீஸ் ஆனது.

தி லெஜண்ட் மூவியில் இவருக்கு ஜோடியாக ஊர்வசி ராத்தூளா, கீத்திகா திவாரி நடித்திருந்தனர். இந்த படம் வருவதற்கு முன்பு ரசிகர்களிடையே இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு இருந்தது. முதல்நாள் முதல் ஷோக்கு இளைஞர்கள் படத்தை பார்த்தனர். ஆனால் படம் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை. மொக்கையாக இருந்தது மட்டுமல்லாமல் ட்ரோல் செய்யப்பட்டது.

சரவண அருள் இந்த படத்தை சுமார் 46 கோடி செலவு செய்து எடுத்திருந்தார். ஆனால் பாக்ஸ் ஆபிசில் இந்த படம் வசூல் செய்தது வெறும் ஆறு கோடி தான். இந்த படம் ஒரு மிகப்பெரிய பிளாப் ஆனது. இருந்தாலும் அண்ணாச்சி அடுத்த படத்திற்கான கதைகளை கேட்க தொடங்கி விட்டார்.

பொதுவாக ஒரு படம் தியேட்டரில் ஓடி முடிந்த பிறகு OTT தளங்கள் அவற்றை விலை கொடுத்து வாங்கி அதை ரிலீஸ் செய்யும். சமீபத்தில் நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமணத்தை பிரபல நிறுவனம் ஒன்று 25 கோடி கொடுத்து வாங்கியதாக தகவல்கள் வெளியாகின. அந்த வகையில் தி லெஜண்ட் திரைப்படத்தை 3 கோடிக்கு வாங்க இருப்பதாக சொல்லப்பட்டது.

ஆனால் அமேசான் நிறுவனம் 30 லட்சத்திற்க்கே அந்த படத்தை பேரம் பேசியுள்ளதாம். அண்ணாச்சி வந்த வரைக்கும் லாபம் என்று நினைத்து கொண்டிருக்கிறார். ஆனால் அவர் நினைப்பில் மண்ணை அள்ளி போடும் விதமாக படம் ரிலீஸ் செய்யப்பட்டு வரும் லாபத்தை வைத்தே அந்த 30 லட்சமும் தருவோம் என்று கூறிவிட்டார்களாம். இதனால் அண்ணாச்சி என்ன செய்வது என்றே தெரியாமல் நெஞ்சை பிடித்து உட்கார்ந்துவிட்டாராம்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்