fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

தானாக உருவாகி மறையும் சிவலிங்கம்.. இந்த அதிசய மலையை தேடி கூட்டம் கூட்டமாக போகும் மக்கள்

amarnath

India | இந்தியா

தானாக உருவாகி மறையும் சிவலிங்கம்.. இந்த அதிசய மலையை தேடி கூட்டம் கூட்டமாக போகும் மக்கள்

இந்தியாவில் வரலாற்று சிறப்புமிக்க கோவில்களில் ஒன்று தான் ஜம்மு காஷ்மீரில் அமைந்திருக்கும் அமர்நாத் பனிலிங்கம். இந்தக் கோவில் 5000 வருடம் பழமை மிக்க கோவில் என்பது வரலாற்று சிறப்பு.

இந்த கோவிலின் வரலாற்றை புரட்டிப் பார்க்கும்போது ஒரு சில உண்மைத் தகவல்கள் கிடைத்துள்ளது, அதாவது சாவா வரம் பெறுவது எப்படி என்ற ரகசியத்தை சிவபெருமான் பார்வதிக்கு தெரிவிப்பதற்காக இந்த இடத்தை தேர்ந்தெடுத்தாராம்.

உலகில் எங்கேயுமே உயிரினங்கள் நடமாடாத இடத்தை தேர்வு செய்ய வேண்டும். அதற்காக, பார்வதியை இங்கு அழைத்து வந்ததாகவும், அதனைப் பற்றிய ரகசியத்தை கூறிய போது காதல் ஜோடி புறாக்கள் இதனை கேட்டதாகவும் தற்போது வரை அந்த புறாக்கள் உயிருடன் இருப்பதாக கூறப்படுகிறது. அந்த புறாக்களை அங்குள்ள சாமியார்கள் பார்த்ததாக கூட தெரிவித்துள்ளனர்.

எவ்வளவு பணிகள் இருந்தாலும் இந்த இடத்தில் அதிகமான புறாக்களை பார்க்கலாம் என்பது கூட இந்த அறிவியல் உண்மையை உணர்த்தும் விதமாக உள்ளது. இது ஒருபுறமிருக்க மே முதல் ஆகஸ்ட் வரை இங்கு இருக்கும் பனிக்கட்டிகளால் ஆன சிவலிங்கம் உருகி மீண்டும் உருவாகிறதாம்.

இந்த பிரமிப்பான அதிசயத்தை காண்பதற்கு இந்தியாவில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். இதுபோன்ற வரலாற்று சிறப்புமிக்க கோயில்களை இந்திய அரசு தீவிரவாத தாக்குதல்கள் அவ்வப்போது ஏற்பட்டாலும் பாதுகாத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top