புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

பிரபஞ்ச அழகியுடன் ரிலேஷன்ஷிப்.. அமரன் பட வில்லன் யார் தெரியுமா?

‘அமரன்’ படத்தில் தீவிரவாதியான ஆசிப் வானியை கொல்லுவதற்கான ஆபரேஷனின் போதுதான் முகுந்த் வரதராஜன் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. வில்லன் ஆசிப் வானி கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். தற்போது பல சேனல்கள் அவரை பேட்டி எடுத்து வருகிறது. அப்போது தான் இவர் பற்றி பல தகவல்கள் கிடைத்துள்ளது.

அமரன் படம் வெளியாகி மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது. வெளியான சில வாரங்களிலேயே பாக்ஸ் ஆபிசில் வசூல் வேட்டை நடத்தி வருகிறது. தற்போது வரை ரூ.200 கோடிக்கும் மேல் வசூல் ஈட்டியுள்ளதாக கூறப்படுகிறது. சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான படங்களில் முதல் 200 கோடி வசூலை தாண்டியுள்ளது.

இந்த நிலையில், அனைவரும், சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடிப்பை எல்லாம் பயங்கரமாக பாராட்டியுள்ளனர். ஆனால் வில்லன் நடிப்பில் பின்னி பெடலெடுத்திருப்பார். ஆனால் பெரும்பாலானோர் அவரை கவனிக்கவில்லை. அவர் யார் தெரியுமா?

பிரபஞ்ச அழகியின் காதலன்

ஆசிப் வானி கதாபாத்திரத்தில் நடித்தவரின் உண்மையான பெயர் ரோஹ்மான் ஷால். இவர் ஒரு மாடல். விளம்பரங்களில் இவரை பார்க்கலாம். அதுமட்டுமல்ல, இவர் முன்னாள் பிரபஞ்ச அழகியும், பாலிவுட்டின் பிரபல நடிகையுமான சுஷ்மிதா சென்னின் முன்னாள் காதலரும் இவர்தான். 2018ம் ஆண்டு இன்ஸ்டாகிராம் மூலம் மலர்ந்தது இவர்களின் காதல்.

ஆனால் அது ஒரு பேசுபொருளானது. ஏன் என்றால் இவர்களுக்குள் 15 வயது வித்தியாசம். இவர்கள் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் இருந்தார்கள். கிட்டத்தட்ட 6 வருடங்கள் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் இருந்த இவர்கள் 2023ம் ஆண்டு டிசம்பர் மாதம் இருவரும் பிரிந்துவிட்டதாக இன்ஸ்டாகிராமில் அறிவித்திருந்தனர்.

இருவரும் தங்களது பிரேக்கப்பை அறிவித்த பின்பும், பல இடங்களுக்கு ஒன்றாக சென்று வருகின்றனர். இருவரும் நண்பர்களாக இருந்து வருகிறார்கள். இது தென்னிந்திய ரசிகர்கள் பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

Trending News