புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

வேட்டையனை விட அதிக வசூல் பார்த்த அமரன்.. திடீர் தளபதி இம்சை தாங்கலயே, தலைவரின் மைண்ட் வாய்ஸ்

Amaran: கடந்த இரண்டு நாட்களாக சோசியல் மீடியா பரபரப்பாக இருக்கிறது. கங்குவா படம் மிகப்பெரும் எதிர்பார்ப்புடன் வெளியானது. ஆனால் தற்போது நெகட்டிவ் விமர்சனங்கள் குவிந்து வரும் நிலையில் அனைவரும் படத்தை ட்ரோல் செய்தனர்.

திடீரென தனுஷ் நயன்தாரா விவகாரம் விஸ்வரூபம் எடுத்ததில் கங்குவா பின்னுக்கு தள்ளப்பட்டது. ஆனால் இதைத் தாண்டி ப்ளூ சட்டை மாறன் இன்னும் தலைவரை வம்புக்கு இழுக்கும் விதமாக சீண்டிக் கொண்டிருக்கிறார்.

எத்தனை பேர் படம் வந்தபோது பல மீம்ஸ் போட்டு இவர் ரஜினி ரசிகர்களை கடுப்பேற்றி வந்தார் அதில் தற்போது அமரன் படத்தோடு வேட்டையனை கம்பேர் செய்து ஒரு மீம்ஸ் போட்டு இருக்கிறார்.

ரஜினியை கிண்டல் அடிக்கும் ப்ளூ சட்டை

கடந்த மாதம் வெளியான வேட்டையன் கலவையான விமர்சனங்களை பெற்று 260 கோடி வரை வசூல் செய்தது. அந்த சமயத்தில் மழைக்கான ரெட் அலர்ட் விடுத்ததும் இந்த வசூல் சரிவுக்கு காரணம் என கொல்லப்பட்டது.

blue sattai
blue sattai

அதையடுத்து தீபாவளியை முன்னிட்டு வெளியான படங்களில் அமரன் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அதன்படி வசூலும் தற்போது வரை 277 கோடியாக இருக்கிறது. இதன் மூலம் வேட்டையன் பட கலெக்ஷனை சிவகார்த்திகேயன் ஓவர் டேக் செய்துவிட்டார்.

இதை ப்ளூ சட்டை மாறன் கிண்டல் அடித்துள்ளார். அதாவது தலைவரின் மைண்ட் வாய்ஸ் ஆக அந்த மீம்ஸ் அமைந்துள்ளது. விஜய் அரசியலுக்கு போவதால் சினிமாவை விட்டு விலகி விட்டார்.

இதனால கொஞ்சம் சந்தோஷமா இருந்தா இப்ப இந்த திடீர் தளபதியோட இம்சை தாங்க முடியலையே என பதிவிட்டுள்ளார். இதை பார்த்த ரஜினி ரசிகர்கள் ப்ளூ சட்டை மாறனை வழக்கம் போல திட்டி தீர்த்து வருகின்றனர்.

- Advertisement -

Trending News