புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

அமரன் ஹிட்டால் சிவகார்த்திகேயன் எடுத்த முடிவு.. எல்லாம் ஒரு லிமிட் தான்.. புரடியூசர்ஸ் அலறல்

சிவகார்த்திகேயன் நடிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சமீபத்தில் வெளியான படம் அமரன். இப்படத்தில் சிவாவுடன் இணைந்து சாய்பல்லவி உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருந்தார். 200 கோடி பொருட்செலவில் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இப்படத்தை பிரமாண்டமாகத் தயாரித்திருந்தது.

இப்படம் ராணுவர் வீரர் மேஜர் முகுந்தனின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு படமாக எடுக்கப்பட்டுள்ளது. இப்படம் வெளிவரும் முன்பாகவே பெரிய எதிர்பார்ப்பு இருந்த நிலையில், இப்படம் முன்னாள் வீரரின் வாழ்க்கை வரலாற்று படம் என்பதால் தேசப்பற்று படம் குறைந்துவிட்ட இக்காலத்தில் இப்படத்திற்கு எல்லோரிடம் அதிக ஆர்வம் தென்பட்டது.

சம்பளத்தை உயர்த்திய சிவகார்த்திகேயன்

இந்த நிலையில், இப்படம் கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி வெளியாகி தியேட்டரில் முதல் நாளிலேயே வசூல் குவிந்த நிலையில் இப்படம் வெளியாகி இதுவரை 189 கோடிக்கு மேல் குவிந்துள்ளது. விரைவில் இப்படம் 200 கோடி கிளப்பில் இணையும் எனவும், இப்படம் சிவகார்த்திகேயன் கேரியரில் பெரிய ஹிட் என்பதால் இனி அவரது கேரியரில் புதிய சம்பளமும், பெரிய மார்க்கெட்டும் ஓபனாகும் என கூறப்பட்டது.

அதேபோல், சிவகார்த்திகேயன் தனது சம்பளத்தை உயர்த்தியுள்ளதாக தகவல் வெளியாகிறது. அமரன் படத்தில் நடிக்க 20 கோடி வரை சம்பளமான பெற்றுள்ளதாக கூறப்படும் நிலையில், இப்படத்தின் வெற்றிக்குப் பின் சிவகார்த்திகேயன் அடுத்து நடிக்கவுள்ள படத்தில் ரூ.50 கோடி சம்பளம் பெறவுள்ளதாக பிஸ்மி தெரிவித்துள்ளார்.

புரடியூசர்ஸ் புலம்பல்

சிவகார்த்திகேயன் தனது திறமையை நிரூபித்து. சினிமாவில் நடிக்க வந்து இந்த உயரத்திற்கு வந்திருக்கிறார். எனவே இது சாதாரண விசயமல்ல. அவர் மேலும் இதேபோல் தொடர்ந்து ஹிட் கொடுத்து வளர வேண்டும் என ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். அதேசமயம் இந்த ஆண்டில் அயலான் படம் சுமார், இப்படம்தான் ஹிட்டு அதற்கு ஏன் சம்பளத்தை உயர்த்த வேண்டும் என புலம்பி வருகின்றனர்.

- Advertisement -

Trending News