சனிக்கிழமை, டிசம்பர் 14, 2024

அள்ள அள்ள குறையாத அமரனின் 7வது நாள் வசூல்.. இயக்குனருக்கு கிள்ளி கொடுத்த கமல் என்ன செய்யப் போகிறார்?

சிவகார்த்திகேயன் நடிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி வெளியான படம் அமரன். இப்படத்தில் சிவாவுடன் இணைந்து சாய்பல்லவி, பவன் அரோரா, ராகுல் போஸ் ஸ்ரீகுமார் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். ஜிவி.பிரகாஷ் இசையமைக்க, சாய் ஒளிப்பதிவு செய்திருந்தார். கலைவாணன் எடிட் செய்திருந்தார்.

இப்படத்தை கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேசனல் 200 கோடியில் பிரமாண்டமாக தயாரித்திருந்தது. இப்படம் ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்று படம் என்பதால் வெளியாகும் முன்பு பெரிய எதிர்பார்ப்பு காணப்பட்டது.

அதன்படி, இப்படத்தின் ஒவ்வொரு அப்டேட்டும் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்திய நிலையில் சொன்ன தேதியில் படம் ரிலீஸாகி தீபாவளி விடுமுறையில் குடும்பத்துடன் இப்படத்தை ரசிகர்கள் பார்த்து வருகின்றனர். சிவாவின் கேரியரில் அதிக வசூல் செய்யும் படமாக் இது இருக்கும் என சினிமா விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.

இயக்குனரின் சம்பளம் எவ்வளவு?

இந்த நிலையில், இப்படம் வெளியாகி 150 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது. இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதால் நாளுக்கு நாள் தியேட்டரில் ரெஸ்பான்ஸும் ரசிகர்கள் எண்ணிக்கையும் கூடி வருகிறது. இந்த நிலையில், ராஜ்குமார் பெரியசாமி இப்படத்தை இயக்குவதற்காக ரூ.6 கோடி சம்பளம் பெற்றிருப்பதாக கூறப்படுகிறது.

தன் மீது நம்பிக்கை வைத்த கமலுக்கு அவர் எதிர்பார்த்தபடி லாபத்தை இப்படம் கொடுத்திருக்கும் நிலையில், நிச்சயம் சொகுசு கார், வீடு என விக்ரம் படத்தில் லோகேசுக்கு பரிசு கொடுத்த மாதிரி இயக்குனர், படக்குழுவினருக்கும் கமல் எதாவது பரிசு கொடுத்து ஊக்குவிப்பார் என கூறப்படுகிறது.

மேலும், ராஜ்குமார் பெரியசாமி அடுத்து தனுஷ் இயகக்த்தில் தனுஷ் ஒரு புதிய படத்தில் நடிக்கவுள்ளார் இப்படத்திற்கு ராஜ்குமாரின் சம்பளம் இதை விட கூடுதலாக இருக்கும் என தெரிகிறது. ஏனென்றால் தன் படத்தை எப்படியும் ஹிட்டாக்குவார் என்பதால் அவர் கேட்கும் சம்பளத்தை தயாரிப்பு நிறுவனமும் கொடுத்த தயாராக இருக்கிறது என கூறப்படுகிறது.

- Advertisement -

Trending News