Connect with us
Cinemapettai

Cinemapettai

amalapaul-cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

பள்ளிப்பருவ புகைப்படத்தை வைரலாகி அமலாபால்.! அப்படியே சிந்து சமவெளி லுக்!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம்  வருபவர்தான் அமலா பால். சமீப காலமாகவே இவர் சர்ச்சை நாயகியாக சோஷியல் மீடியாக்களில் அதிக அளவில் பேசப்பட்டு வருகிறார்.

என்னதான் அமலா பால் அறிமுகமானது மலையாள திரையுலகில் என்றாலும், தமிழில் ‘மைனா’ படத்தில் நடித்ததன் மூலம் பல இளைஞர்களின் கனவுக் கன்னியாகவே மாறினார். இதனைத் தொடர்ந்து தனுஷ், விஜய், சூர்யா போன்ற முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்தார் அமலா.

மேலும் சமீபத்தில் அமலா பால் நடிப்பில் வெளியான ‘ஆடை’ திரைப்படம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதோடு, கடும் விமர்சனத்துக்கும் உள்ளானது. ஏனெனில் அந்த படத்தில் அமலாபால் ஆடையில்லாமல் நடித்திருப்பார்.

தற்போது நடிகை அமலாபால் மலையாளம் மற்றும் தமிழ் படங்களில் பிசியாக நடித்து வருகிறாராம்.

இந்த நிலையில் அமலாபாலின் பள்ளிப்பருவ புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

Amala-Paul

Amala-Paul

மேலும் அந்த புகைப்படத்தில் அமலா பால், இப்போது எப்படி இருக்கிறாரோ அதே போல் தான் பள்ளிப் பருவத்திலும் இருந்திருக்கிறார்.

எனவே, அமலாபாலின் சிறுவயது புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாக பரவுவதோடு. ரசிகர்களின் ஏகபோகமாக கமெண்ட்களையும் பெற்று வருகிறது.

Continue Reading
To Top