நடிகை அமலா பால், தற்போது நயன்தாராவின் புகழின் உச்சத்தை தொட நினைக்கிறார்.

நடிகை அமலா பால் தற்போது அதிக படங்களில் நடித்து வருகிறார். அவருக்கு பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளது. தமிழில் இவர் ‘வேலையில்லா பட்டதாரி 2’ ‘திருட்டு பயலே2’, ‘மின்மினி’, ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ ஆகிய படங்களிலும் நடிக்கிறார்.

மேலும் செண்சுரியன் பிலிம்ஸ் திரு.ஜோன்ஸ் மற்றும் ஷாலோம் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் பெயரிடப்படாத படத்திலும் நடிக்கிறார். ரேவதி இயக்கும் ‘குயின்’ படத்திலும் நடிக்கிறார். அடுத்ததாக கண்ணன் இயக்கத்தில் உருவாகும் ‘அச்சாயன்ஸ்’ என்ற மளையாளம் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

அடுத்ததாக அனூப் இயக்கத்தில் உருவாகும் பெயரிடப்படாத திரில்லர் படத்திலும் நடிக்கிறார். சுமார் 8 படங்களில் நடித்து வரும் அமலா பாலுக்கு நாள் தோறும் பட வாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளன.இதுமட்டுமில்லாமல் சமீபத்தில் கன்னடத்தில் கிச்சா சுதீப்புடன் இவர் இனைந்து நடித்த ‘ஹெப்புலி’ படம் 100 கோடி வசூலை தாண்டி வெற்றிகரமாக ஓடிகொண்டிருக்கிறது. நடிகை நயன்தாரா தொட்ட உச்சத்தை அமலா பால் தொட நினைக்கிறார் போலும்.