Connect with us

Cinemapettai

நான்கு மொழிகளில் அமலாபால் பிஸி!!

amalapaul

Cinema News | சினிமா செய்திகள்

நான்கு மொழிகளில் அமலாபால் பிஸி!!

விவாகரத்து அறிவிப்புக்குப் பிறகு அமலா பாலுக்கு வாய்ப்பு மேல் வாய்ப்புகள், அதுவும் தென்னிந்திய மொழிகள் அனைத்திலும். வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் பிரம்மாணடமாக தயாரிக்கப்படும் ‘வட சென்னை’ படத்தில் தனுஷ் ஜோடியாக முக்கிய வேடம், கன்னடத்தில் கிருஷ்ணா இயக்கத்தில், கிச்சா சூதிப் நடிப்பில் பெரும் பொருட்செலவில் தயாரிக்கப்பட்டுள்ள ‘ஹெப்புலி’ படத்தில் கதாநாயகி வேடம், தெலுங்கில் இன்னும் பெயரிடப்படாத இரண்டு படங்களில் முக்கிய வேடம் என எல்லாமே பெரிய படங்கள்.

இந்தப் படங்களுடன் ஏ.ஜி.எஸ் எண்டர்டெயன்மெண்ட் கல்பாத்தி எஸ் அகோரம் தயாரிப்பில் சுசி கணேசன் இயக்கும் பிரம்மாண்ட பொருட்செல்வில் உருவாகும் ‘திருட்டு பயலே’ படத்தில் சிம்மா மற்றும் பிரசன்னா இருவருக்கும் போட்டி போடும் வகையில் மிகுந்த சவாலான வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

மலையாளத்திலும் நடிக்கக் கேட்டுள்ளார்களாம். “தென்னிந்தியாவின் அனைத்து மொழிகளிலும ஒரே நேரத்தில் நடிப்பது மகிழ்ச்சியையும் நிறைவையும் தருகிறது. எந்த வேடமென்றாலும், அதை அனுபவித்துச் செய்ய வேண்டும். இந்தப் படங்கள் அனைத்துமே எனக்கு ஸ்பெஷலானவை,” என்கிறார் அமலா பால்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top