Connect with us

Cinemapettai

தைரியம் இருந்தால் விஜயிடம் இந்த கேள்வியை கேட்பீர்களா? அமலா பால் காட்டம்

Cinema News | சினிமா செய்திகள்

தைரியம் இருந்தால் விஜயிடம் இந்த கேள்வியை கேட்பீர்களா? அமலா பால் காட்டம்

தன்னிடம் அம்மாவாக நடித்ததில் மார்க்கெட் பாதிக்கப்படாத எனக் கேட்கப்பட்ட கேள்விக்கு அமலா பால் காட்டமாக பதில் அளித்து இருக்கிறார்.

சிந்து சமவெளி படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் அமலாபால். முதல் படமே அடல்ட் பின்னணி என்பதால் அமலா பாலுக்கு சரியான தொடக்கம் அமையவில்லை. அதை அப்படியே அடுத்து நடித்த மைனா படத்தில் ப்ளஸாக மாற்றினார். தொடர்ந்து, தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்தவர் வெற்றி நாயகி பட்டியலில் சேர்ந்தார். பிறகு இயக்குனர் ஏ.எல்.விஜயை திருமணம் செய்து கொண்டு மண வாழ்வில் இணைந்தார். திருமணத்திற்கு பிறகும் அம்மா கணக்கு உள்ளிட்ட சில படங்களில் நடித்தவருக்கு, திருமண வாழ்வில் திடீரென மன கசப்பு ஏற்பட்டது. கணவருடன் நீதிமன்றத்தில் முறையாக விவகாரத்து பெற்றுக்கொண்டனர்.

இதை தொடர்ந்து, தமிழ் சினிமாவில் மீண்டும் முழு நேர நாயகியாக அவதாரம் எடுத்தார். சமீபத்தில், வேலையில்லா பட்டதாரி 2, திருட்டு பயலே 2 ஆகிய படங்கள் இவர் நடிப்பில் வெளியாகி இருக்கிறது. அரவிந்த் சாமியுடன் இவர் நடித்த பாஸ்கர் ஒரு ராஸ்கல் திரைப்படம் வெளியீட்டிற்காக காத்திருக்கிறது. இப்படத்தை மலையாள இயக்குனர் சித்திக் இயக்குகிறார். தெறி நைனிகா, சேதுபதி ராகவ் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இப்படத்தின் ரிலீஸுக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்துள்ளனர்.

இந்நிலையில், இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சமீபத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அமலாபாலிடம் நிருபர்கள் சில கேள்விகளை அடிக்கினர். எல்லாவற்றுக்கும் பொறுமையாக பதில் அளித்து வந்தார். அப்போது, இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக நடித்து இருக்கிறீர்களே மார்க்கெட் பாதிக்கப்படாது எனக் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அமலாபால், நடிகைகளிடம் மட்டும் ஏன் தொடர்ந்து இந்த கேள்வி முன் வைக்கப்படுகிறது எனத் தெரியவில்லை. இந்தக் கேள்வியை அரவிந்த் சாமி, சூர்யா, விஜய், விஜய் சேதுபதியிடம் கேட்பீர்களா? என சற்று காட்டமாகவே கேட்டுள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top