Videos | வீடியோக்கள்
அமலாபால் சீன், ஸ்ருதிஹாசன் லிப் லாக்.. காட்டு வைரலாகும் Pitta kathalu வெப்சீரிஸ் டீசர்
தென்னிந்திய சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகைகளாக வலம் வரும் அமலாபால் மற்றும் ஸ்ருதிஹாசன் ஆகிய இருவரும் ஒரே வெப்சீரிஸில் மிகவும் மோசமான படுக்கை அறை மற்றும் முத்தக்காட்சிகளில் நடித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் தற்போது இந்தியாவில் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியுள்ளது. நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் தயாரிக்கும் வெப்சீரிஸ் மற்றும் படங்கள் அனைத்துமே தரமாக இருப்பதாக ரசிகர்கள் மத்தியில் பேச்சுக்கள் எழுந்துள்ளன.
உலக அளவில் ஆதிக்கம் செலுத்திவரும் நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் தற்போது இந்தியாவிலும் தன்னுடைய OTT மார்க்கெட்டை அதிகப்படுத்த முடிவு செய்துள்ளார்களாம். அதன் முன்னோட்டமாக ஒவ்வொரு மொழிகளிலும் உள்ள முன்னணி நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் ஆகியோர்களை வைத்து வெப்சீரிஸ் தயாரித்து வருகிறது.
சமீபத்தில் நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் தயாரித்த பாவ கதைகள் என்ற தமிழ் வெப் சீரிஸ் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து தற்போது தெலுங்கில் அதே மாதிரியான கதையம்சம் கொண்ட பிட்டா காதலு(Pitta kathalu) என்ற வெப்சீரிஸ் ஒன்றை தயாரித்துள்ளது.
அதில் அமலாபால், ஸ்ருதி ஹாசன், ஈஷா ரெபா, கொலைகாரன் படப் புகழ் ஆஷிமா நர்வால் போன்றோர் நடித்துள்ளனர். இதில் அமலாபால் மற்றும் ஸ்ருதிஹாசன் ஆகியோர் எல்லை மீறிய கவர்ச்சி காட்சியில் நடித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர்.
பிட்டா காதலு என்ற வெப் சீரிஸ் டீசர் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது. அதிலும் முக்கியமாக அதில் இடம்பெற்றிருந்த அமலாபாலின் படுக்கையறை காட்சி மற்றும் ஸ்ருதி ஹாசன் உதட்டோடு உதடு முத்தக்காட்சி போன்றவை இந்த வெப்சீரிஸ் மீதான எதிர்பார்ப்பை எக்கச்சக்கமாக ஏற்படுத்தி விட்டது என்றே சொல்லலாம்.