Connect with us
Cinemapettai

Cinemapettai

amala-paul-cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

டபுள் மீனிங்கில் பேசியவருக்கு சவுக்கடி கொடுத்த அமலா பால்.. மிரண்டுபோன வலைதளம்!

தமிழ் சினிமாவில் ரசிகர்களுக்கு பிடித்தமான கதாநாயகிகளில் ஒருவர் தான் அமலாபால். இவர் மலையாள நடிகையாக இருந்தாலும் தமிழ் ரசிகர்களிடையே அதிக ஆதரவை பெற்றுள்ளார்.

இப்படி இருக்கும் சூழ்நிலையில் இவர் தனது ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்களுடன் உரையாடுவதை வழக்கமாக வைத்திருப்பார்.

அப்படியிருக்கையில் இவர் பதிவிடும் புகைப்படங்களுக்கு டபுள் மீனிங் உடன் கமெண்ட் அடித்துள்ளவரை, கண்டும் காணாமலும் செல்லாமல், சவுக்கால் அடித்தபடி தனது பதிவை தட்டி விட்டுள்ளார் நடிகை அமலாபால்.

தனது ட்விட்டர் பக்கத்தில் அமலாபால் பதிவிட்ட புகைப்படத்திற்கு ரசிகர் ஒருவர் “லெஜெண்டுக்கு மட்டுமே தான் அதெல்லாம் தெரியும்” என்று டபுள் மீனிங்கில் பதிவிட்டிருந்தார்.

இந்தப் பதிவைப் பார்த்த அமலாபால் பொறுத்துக்கொள்ள முடியாமல் “என்ன மார்பகம் தான? என்னால் சிரிப்பு தாங்க முடியல நாம இப்போ 2020-ல் இருக்கிறோம் சகோதரரே! #லெஜண்ட்மற்றும்மார்பகம்” என்று நெத்தியடி பதிலை கொடுத்துள்ளார்

எனவே அமலாபாலின் இந்தப் பதிவிற்கு ரசிகர்கள் பலரும் தங்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

amala-paul-1

amala-paul-1

Continue Reading
To Top