Reviews | விமர்சனங்கள்
அசத்தலான மெசேஜுடன் அற்புதமான திரில்லர் – அமலா பாலின் ஆடை திரை விமர்சனம்.
படத்தின் பரஸ்ட் லுக் வெளியானதில் இருந்தே மிகுந்த எதிர்பார்ப்பை கொடுத்த படம். அதற்கு ஏற்றபடி டீஸர், ட்ரைலர், ப்ரோமோஷன் என படத்தை நன்றாக மார்க்கெட்டிங் செய்ததன் விளைவே இந்த பிரம்மாண்ட ஒபெநிங். மேயாத மான் பட இயக்குனர் ரத்னகுமாரின் அடுத்த படைப்பு; தன் முதல். படத்தில் இருந்து முற்றிலும் மாறுபட்ட படம் இது. A சென்சார் பெற்ற படம்.
கதை –
மார்பக வரிக்கு எதிராக சமஸ்தானத்தை எதிர்த்து போராடி உயிர் நீத்த நங்கேலி பற்றிய அறிமுகம் முடிந்த பின் ஆரம்பம் ஆகிறது படம்.
சுதந்திர கோடி என்ற தனது பெயரை காமினி என மாற்றிவிட்டு, டிவியில் தன் நண்பர்களுடன் சேர்ந்து “பிராங்க் ஷோ” நடத்துவது தான் நம் ஹீரோயினின் வேலை. ட்யூக் பைக், சரக்கு, தம், மனதில் நினைத்ததை பேசுவது, செய்வது என ஜீன்ஸ் போட்ட ஜாலி கர்ள். பெட் கட்டிவிட்டால், அதை நிவர்த்தி செய்ய அனைத்தையும் செய்யும் திறன் உடையவள்.
தன் பிறந்தநாள் அதுவுமாக ஆபிசில் (காலி செய்த தினத்தின் இரவு) நண்பர்களுடன் குடித்துவிட்டு கும்மாளம் போட, நினைவு திரும்பிய பின் நிர்வாணமாக அவள் மட்டும். எழுந்த பின்; தன் உடம்பை மறைக்க ஒரு காகிதம் கூட கிடையாது என்ற சூழ்நிலையில் சிக்குகிறாள். போனில் பேலன்ஸ் கிடையாது, வெளியுலகை தொடர்பு கொள்ள அவள் படாத பாட பட வேண்டிய நிலை . மகளை தேடி போலீஸ் செல்லும் அம்மா. குடித்துவிட்டு சென்ற இவளின் நண்பர்களின் நிலை என்ன ? இவளை இது போல நிர்வாணமாக்கி சித்திரவதை செய்வது யார், அதன் காரணம் என்ன என முழு வட்டமாக ஆரம்பித்த நங்கேலியுடன் தொடர்பு படுத்தி முடிகிறது இந்த சஸ்பென் திரில்லர்.
அலசல் – இன்றைய தேதிக்கு நாட்டுக்கு மிகவும் தேவையான மெசேஜ்ஜை சொல்லும் படம். பெண்ணியவாதிகள் என்று சொல்லிக்கொண்டு சுற்றும் க்ரூப்பும் சரி, பெண் சுதந்திரம் பேசுபவர்களும் கட்டாயம் பார்க்க வேண்டிய படம். ஒருவனின் மகிழ்ச்சி மற்றவனுக்கு எப்படி ஒரு வலியை தரும் என இப்படம் பார்ப்பதன் வாயிலாக நாம் அறிய முடியும். முதல் பாதி முழுவதும் ஜாலியோ ஜாலி தான்.
இரண்டாம் பாதியில் நிர்வாணமாக அமலாபால் நம்மையும் பதற வைக்கிறார். இதற்கு காரணமான அந்த கொடூர நபர் யார், அவரின் பிளாஷ் பேக் என்னவாக இருக்கும் என பார்க்கும் ஆர்வ மிகுதியை அதிகரிக்க வைத்தது தான் இந்த டீம்மின் பிளஸ். மிகவும் யதார்த்தமான அதே சமயம் அழுத்தமான பின்கதையை அமைத்த இயக்குனருக்கு ஸ்பெஷல் க்ளாப்ஸ்.
பிளஸ் – இயக்குனர் ரத்தினகுமார், அமலாபால், பிரதீப் குமாரின் இசை, விஜய் கார்த்திக் கண்ணனின் ஒளிப்பதிவு, திரைக்கதை.
மைனஸ் – சில இடங்களில் லாஜிக் மீறல் ( ஆபிசில் நிறுத்திய பைக் என்ன ஆனது, அமலாபாலை பற்றி யோசிக்காமல் சென்ற நண்பர்கள் )
வெர்டிக்ட் – இன்றைய தேதியில் மிகவும் முக்கியமான படம். கல்விமுறை குறைபாடு, நீட் தேர்வு, செலஃபீ மோகம், சோஷியல் மீடியா அடிக்ஷன் என போகிற போக்கில் பலவற்றை டச் செய்து சென்றுள்ளார் இயக்குனர். இன்றைய நெக்ஸ்ட் ஜென் இளசுகள் பார்க்க வேண்டிய படம்.
நம் சுதந்திரம் என்பது அடுத்தவரின் மூக்கின் நுனி வரை தான் என்பதை நமக்கு உணர்த்தும் பாடமே இப்படம் ஆடை.
சினிமாபேட்டை ரேட்டிங் – 3.75 / 5 .
