புதன்கிழமை, அக்டோபர் 16, 2024

ஓணம் திருநாளில் மகனின் புகைப்படத்தை வெளியிட்ட அமலா பால்.. கொள்ளை அழகு, வைரலாகும் போட்டோஸ்

Amala Paul: நடிகை அமலாபால் ஓணம் திருநாளில் தன்னுடைய மகனின் புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார். தமிழ் சினிமாவில் மைனா படம் மூலம் ரசிகர்களுக்கு பரீட்சயமானவர் அமலா பால். விஜய், விக்ரம், தனுஷ் என அடுத்தடுத்து டாப் ஹீரோக்களுடன் கைகோர்த்து நடித்த முன்னணி ஹீரோயின் ஆனார்.

சினிமாவில் மார்க்கெட் உச்சத்தில் இருக்கும் பொழுதே இயக்குனர் ஏ எல் விஜயை காதல் இது திருமணம் செய்து கொண்டார். இந்த திருமண வாழ்க்கை விவாகரத்தில் முடிந்த பிறகு அமலா பால் சில வருடங்கள் யோகா மற்றும் பயணங்களில் கவனம் செலுத்தினார்.

அதன் பின்னர் தன்னுடைய நீண்ட நாள் காதலரான ஜகத் தேசாய் என்பவரை திருமணம் செய்தார். திருமணமான ஒரு சில மாதங்களிலேயே அமலா பால் தன்னுடைய கர்ப்ப செய்தியை அறிவித்தார். நடிகைகளிலேயே அமலாபால் போல் கர்ப்ப காலத்தை இவ்வளவு மகிழ்ச்சியாக கொண்டாடியது யாருமே இல்லை.

அமலா பால் நிறைமாதத்துடன் இருக்கும்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் ரசிகர்களிடையே பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் நடிகை அமலா பாலுக்கு கடந்த ஜூன் மாதம் குழந்தை பிறந்தது.

தன்னுடைய அழகான ஆண் குழந்தைக்கு அமலா பால் தம்பதியினர்’ இலை’ என பெயர் சூட்டினார்கள். பெயரே பெரிய அளவில் வைரலான நிலையில், இன்று குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார் அமலாபால், தன் கணவர் மற்றும் குழந்தையுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் அது.

அமலாபாலின் முதல் திருமண வாழ்க்கை மனக்கசப்பில் முடிந்தாலும், இரண்டாவது திருமண வாழ்க்கையில் அவர் ரொம்பவே சந்தோஷமாக இருப்பது அவருடைய முகத்தை பார்த்தாலே தெரிகிறது.

- Advertisement -spot_img

Trending News