Tamil Cinema News | சினிமா செய்திகள்
ஷூட்டிங் ஸ்பாட்டில் விபத்து : ஹாஸ்பிடல் பெட்டில் படுத்த படி விக்டரி போஸ் கொடுக்கும் அமலா பால் !
அமலா பால் இன்றைய தேதியில் ஏகத்துக்கு பிஸியான நடிகை. விஷ்ணு விஷாலின் ‘ராட்சசன்’, கே.ஆர்.வினோத்தின் ‘அதோ அந்த பறவை போல’, அறிமுக இயக்குநர் தீபு ராமானுஜம் படம், மலையாளத்தில் பிரித்விராஜின் ‘ஆடுஜீவிதம்’ மற்றும் ஹிந்தியில் அர்ஜுன் ராம்பால் படம், மேயாத மான் ரத்தினகுமார் படம் என அடுத்தடுத்து கமிட் ஆகியுள்ளார்.
அதோ அந்த பறவை போல்

amala paul flp
அறிமுக இயக்குனர் வினோத் இயக்கத்தில் அமலா பால் நடிக்கும் ஆக்ஷன் மற்றும் அட்வென்ச்சர் கலந்த படம். இப்படத்தில் ஸ்டண்ட் படப்பிடிப்பின் பொழுது தான் இவரின் கை ட்விஸ்ட் ஆகியுள்ளது, மேலும் லிகமெண்ட் பாதிப்பும் ஏற்பட்டுள்ளது. இதற்கான சிகிச்சையில் கேரளாவில் உள்ளார் அமலா. ஹாஸ்பிடல் பெட்டில் படுத்த படி ஸ்டைலிஷ் போஸ் கொடுத்துள்ளார் இவர்.

Amala Paul
Thank you all for your well wishes, my hand will heal faster now ?
between, always hated auto-correct, but when typing text with left hand its a saviour!! LIT ?♥✨#amalapaul #recoverytime— Amala Paul ⭐️ (@Amala_ams) August 14, 2018
அதுமட்டுமன்றி, ஸ்டேட்டஸாக “உங்களின் ஆசிர்வாதத்துக்கு நன்றி, என் கை சீக்கிரமாக குணம் ஆகிவிடும். எனக்கு என்றைக்குமே ஆட்டோ – கரெக்ட் பிடிக்காது, ஆனால் இப்பொழுது அதுவே ஆபத்பாந்தவனாக உள்ளது.” என்று குசும்பாய் தட்டியுளார்.
