ஒரு ஹீரோயின் மற்றோரு ஹீரோயினுடன் நட்பாக இருக்க மாட்டார், நடிப்பை பாராட்ட மாட்டார்கள். ஈகோ இருக்கும், இவர் நமக்கு போட்டியாக வந்துவிடுவாரோ என்று தான் யோசிப்பார்கள். இப்படி நடிகைகள் பற்றி பல புரளிகள் நம் கோலிவுட்டில் சொல்லப் படுவதுண்டு. இவை அனைத்தையும் தவிடு பொடி ஆக்கும் விதமாக அமலா பால் நடந்துக்கொண்டார்.

aaram-nayathara
நயன்தாரா அறம்

நயன்தாரா கலக்டராக, ஆழ் துளை கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்டெடுக்க போராடுவது தான் கதை. இப்படம் வெள்ளியன்று ரிலீஸ் ஆனது. இப்படத்தை பார்த்துவிட்டு பலரும் படக்குழுவை புகழ்ந்து தள்ளுகின்றனர். இந்த லிஸ்டில் புதிதாக சேர்ந்திருப்பவர் நம் அமலா பால்.

amala paul

அமலா பால்- திருட்டு பயலே

சுசி கணேசனின் ‘திருட்டு பயலே’ படத்தின் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது. பாபி சிம்ஹா, அமலா பால், பிரசன்னா, விவேக், ரோபோ ஷங்கர் போன்ற முன்னணி நடிகர்கள் இப்படத்தில் நடித்துள்ளனர். இப்படம் நவம்பர் 30 ரிலீஸ் ஆகிறது. தற்பொழுது  படத்திற்கான ப்ரோமோஷன் வேலைகளில் அமலா பால் பிஸியாக உள்ளார். அமலா அறம் படம் பார்த்துவிட்டு  தன் ட்விட்டர் பக்கத்தில் இந்த ட்வீட் போட்டார் …

“இன்று நிரூபணம் ஆகிவிட்டது நல்ல சினிமாவிற்கு ஆதரவு இருக்கும் என்று. இயக்குனர் கோபி நைனார், நயன்தாராவுக்கு வாழ்த்துக்கள். ஸ்டார் ஹீரோக்களை வைத்து மசாலா படம் எடுக்கும் பாணியை, உடைத்தெரிந்து விட்டது அறம். நல்ல சினிமா, நல்ல கதை, நல்ல நடிப்பு மதிக்கப்படும்.”

Amala Paul, Nayanthara
சினிமாபேட்டை கமெண்ட்ஸ்

இவர்கள் இருவரும் நட்புடன் இருப்பது ஒன்றும் ஆச்சிர்யமான விஷயம் இல்லை. இவர்களிடம் பல ஒற்றுமை உள்ளது. இருவரும் தங்கள் காதலுக்காக, சினிமாவை விட்டு ஒதுங்கியவர்கள். பின்னர் ரீ என்ட்ரி கொடுத்தவர்கள். நயன்தாராவுக்கு மாயா என்றால் அமலா பாலுக்கு அம்மா கணக்கு படம் தான் பெஞ்ச் மார்க். எனினும் இவர்கள் நட்புடன் இருப்பது நல்ல விஷயமே.