Tamil Cinema News | சினிமா செய்திகள்
விஜய்சேதுபதி படத்தில் இருந்து அமலாபாலை தூக்கிய தயாரிப்பாளர்.. ஆடை டீசர் தான் காரணமா
தயாரிப்பாளர் நிறுவனத்தால் ஏற்பட்ட பிரச்சினையால் விஜய் சேதுபதி படத்தில் இருந்து விலகிய அமலாபால். அதற்கான காரணத்தை வெளியிட்டுள்ளார் அமலாபால்.
எஸ்பி ஜனநாதனின் இயக்கத்தில் தற்போது விஜய் சேதுபதியை வைத்து பழனியில் படபூஜை தொடங்கப்பட்டது. விஜய் சேதுபதிக்கு ஜோடியாக அமலா பால் இப்படத்தில் நடிப்பதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். மேலும் இப்படத்தின் பூஜை விஜய்சேதுபதி வேஷ்டி சட்டையுடன் இருந்த புகைப்படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றன.
தற்போது இரு தினங்களுக்கு முன்பு அமலாபாலுக்கு பதிலாக மேகா ஆகாஷ் நடிப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதை பற்றி அமலாபால் தனது ட்விட்டர் பக்கத்தில் தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார். ‘நான் தயாரிப்பு நிறுவனத்துடன் ஒத்துழைக்காததால் தான் வெளியேற்றப்பட்டதாக கூறியது தவறு’ என அமலா பால் கூறினார்.
மேலும் பாஸ்கர் தி ராஸ்கல் படத்தில் என்னுடைய சம்பள பாக்கி இருந்தது. அது மட்டுமில்லாமல் தயாரிப்பாளருக்கு படம் ரிலீஸ் செய்ய நான்தான் பண உதவி செய்தேன். அவருக்கு அந்த படம் நஷ்டம் அடைந்ததை தொடர்ந்து நான் முழுமையான சம்பளத்தை அவரிடம் கேட்கவில்லை என அதில் குறிப்பிட்டிருந்தார்.
மேலும் ஆடை படத்துக்கு இதுவரை இல்லாத குறைந்த அளவிற்கு சம்பளம் கேட்டு நடித்து முடித்து கொடுத்துள்ளேன். இந்த படம் சிறப்பாக வந்துள்ளதால் இதனை வெளியிடுவதற்கு பல தயாரிப்பாளரிடமும் கேட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.
கடைசியாக அமலா பால் VSP33 படத்துக்காக காஸ்டியூம்களை வாங்க மும்பைக்கு வந்துள்ளேன். அதுவும் என் சொந்த செலவில் தான் வந்துள்ளேன் என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் ஆடை பட டீஸர் வெளியீட்டு பிறகு என்னை களங்கப்படுத்த இந்த மாதிரியான தகவலை தயாரிப்பு நிறுவனம் கூறி வருவதாக தெரிவித்துள்ளார். அமலாபால் தான் வெளியிட்ட அறிக்கைக்கும் விஜய் சேதுபதிக்கு எந்த ஒரு சம்பந்தமும் இல்லை என்றும், அவருடைய நடிப்புக்கு நான் ஒரு ரசிகை என்றும், மேலும் அவருடன் நடிக்க ஆவலாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். தயாரிப்பு நிறுவனம் கூறிய வதந்திகளுக்கு பதிலாக தான் இந்த அறிக்கை வெளியிடுவதாக தெரிவித்துள்ளார்.
#VSP33 #TheTruth pic.twitter.com/jETkOIpyba
— Amala Paul ⭐️ (@Amala_ams) June 27, 2019
