பிரபல ஹீரோ படத்தில் இருந்து விலகிய அமலா பால். இது தான் காரணம். - Cinemapettai
Connect with us

Cinemapettai

பிரபல ஹீரோ படத்தில் இருந்து விலகிய அமலா பால். இது தான் காரணம்.

News | செய்திகள்

பிரபல ஹீரோ படத்தில் இருந்து விலகிய அமலா பால். இது தான் காரணம்.

‘காயங்குளம் கொச்சுண்ணி’ .  இது நிவின் பாலி நடித்துக்கொண்டிருக்கும் மலையாளப்படம். சமீபத்தில் மலையாளத்தில் வெளிவர இருக்கும்  படங்களிலேயே மிக பிரம்மாண்ட படமாக இது இருக்கும் என்கிறார்கள். காயங்குளத்தில் நடந்த உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு எடுக்கப்படும் படம். ஹைவெயில் செல்பவர்களிடன் கொள்ளை அடிக்கும் கதாபாத்திரம் நிவின் பாலியினுடையது. ராபின் ஹூட் பட ஸ்டைலில் இருக்குமாம். பணக்காரரிடம் இருந்து திருடி ஏழை மக்களுக்கு தருவாராம்.

kayamkulam kochunni

இப்படத்தையை இயக்குபவர் ரோஷன் ஆண்ட்ருஸ். இவர் தான் ஜோதிகாவின் கம் பேக் படமான 36 வயதினிலே படத்தை இயக்கியவர். ஹீரோவுக்கு நிகராக்க நடிப்பதற்கு ஸ்கோப் உள்ள கதாபாத்திரம் ஹீரோயினுடையது. இதில் நடிப்பதற்காக அமலாபால் ஒப்பந்தம் செய்யபட்டிருந்தார். சமீபத்தில், அமலாபாலின் தோற்றம் இப்படித்தான் இருக்கும் என ஒரு வரைபடத்தையும் வெளியிட்டது படக்குழு.

இந்நிலையில் நேற்று வந்த தகவலின் படி அமலாபால் இந்த படத்தில் இருந்து தவிர்க்கமுடியாத சில காரணங்களுக்காக விலகிவிட்டார் என அறிவிக்கப்பட்டது. உடனே இது சர்ச்சை போல் பரவியது. அமலா பால் தானாக முன் வந்த விலகினாரா அல்லது நீக்கப்பட்டாரா ? என்று அலச ஆரம்பித்தனர் நம் நெட்டிசன்கள். பிரியா ஆனந்த் அமலாவுக்கு பதிலாக நடிக்கிறர் என்று செய்திகள் வெளியாக தொடங்கியது.

இதில் கடுப்பான அமலா பால் தன் ட்விட்டரில்

“என்னை யாரும் நீக்கவில்லை, கால்- சீட் இல்லாத காரணத்தால். நான் தான் விலகினேன். நான் ஒன்றும் வேலை இல்லாமல் வெட்டியாக இல்லை.” என்று பதில் அளித்தார்.

இந்த சலசலப்பு ஒரு புறம் போய்க்கொண்டு இருக்க பிரியா ஆனந்த் தன் ட்விட்டரில் இந்த டீவீட்டை தட்டினார்..

பின்னர்  அமலா பாலுக்கு பதிலாக பிரியா ஆனந்த் ஒப்பந்தமாகியுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கெனவே பிருத்திவி ராஜுடன் ‘எஸ்ரா’ என்ற மலையாள படத்தில் நடித்துள்ளார் பிரியா ஆனந்த். இது அவர் நடிக்கும் இரண்டாவது மலையாள படமாகும்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top