fbpx
Connect with us

Cinemapettai

அடர்ந்த காடுகளில் சுற்றும் அமலாபால்.. கொடுமைகளை அனுபவிக்கும் நடிகை

amala-paul

News | செய்திகள்

அடர்ந்த காடுகளில் சுற்றும் அமலாபால்.. கொடுமைகளை அனுபவிக்கும் நடிகை

செஞ்சுரி இன்டர்நேஷனல் பிலிம்ஸ் சார்பில் ஜான்ஸ் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் கே.ஆர்.வினோத் இயக்கத்தில் உருவாகும் படம் அதோ அந்த பறவை போல இப்படத்தில் அமலாபால் நடித்திருக்கிறார். இப்படத்தில் பல காட்சிகள் காடுகளில் எடுக்கப்பட்டதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் அமலாபால் படும் சிரமப்பட்டதாக கூறியுள்ளனர்.


தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் இந்த படத்தை எடுத்துள்ளனர். இந்த படத்தில் அமலாபால் ஒரு இளம் தொழில் அதிபர். அவர் காட்டுக்குள் சென்று படும் இன்னல்களை சுவாரஸ்யமாக எடுத்துள்ளதாக கூறியுள்ளனர். இந்த படத்திற்காக அமலாபால் பெரிய பெரிய மரங்களில் ஏறுவதுபோல் ஸ்டண்ட் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. இப்படம் சிறப்பாக அமைவதற்கு தயாரிப்பாளர் கொடுத்த ஒத்துழைப்பு மிக முக்கியமான கூறியுள்ளார்.

மூத்த நடிகர் ஆஷிஷ் வித்யார்த்தி வனத்துறை அதிகாரியாக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். பிரவீன் என்ற குழந்தை நட்சத்திரம் இந்த படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமாகிறார்.அதுமட்டுமில்லாமல் பாலிவுட் நட்சத்திரங்கள் சில நடித்துள்ளனர் என கூறியுள்ளனர். ஜேக்ஸ் பிஜோய் இசையமைக்கும் இந்த படத்திற்கு சாந்தகுமார் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ஜான் ஆப்ரகாம் படத்தொகுப்பையும், சரவணன் கலை இயக்கத்தையும் கொண்டுள்ளனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top