Connect with us
Cinemapettai

Cinemapettai

amala-paul-new

Tamil Cinema News | சினிமா செய்திகள்

இரண்டாவது திருமணத்தை மறைக்க முயலும் அமலாபால்.. பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான் கதை தான்!

நடிகை அமலாபால் இயக்குனர் விஜய்யை திருமணம் செய்து ஒரே வருடத்தில் விவாகரத்து பெற்றுக் கொண்டார்.

அதனைத் தொடர்ந்து சினிமாவில் கவனம் செலுத்தி வந்த அமலா பால் மும்பையை சேர்ந்த பாடகர் பவ்னிந்தர் சிங் என்பவருடன் திருமணம் செய்து கொண்ட புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

யாருக்கும் தெரியாமல் ரகசியமாக இருக்கட்டும் எனக்கூறிய அமலாபாலுக்கு தெரியாமல் நைசாக புகைப்படங்களை இணையதளத்திற்கு விட்டார் பவ்னிந்தர் சிங்.

இதனால் உடனடியாக அவருடன் சண்டை போட்டுக் கொண்டு தன்னுடைய சொந்த மாநிலத்திற்கு பொட்டி கட்டி கொண்டு வந்து விட்டார் அமலாபால்.

இது நடந்து ஆறு மாதங்களுக்கு மேலான நிலையில் தற்போது தன்னுடைய புகைப்படங்களை தவறுதலாக பயன்படுத்தியதாக பாடகர் மீது அவதூறு வழக்கு போட்டுள்ளார் அமலா பால்.

திருடனுக்கு போலீஸ் துணை போவதைப் போல அமலாபாலின் இரண்டாவது திருமணத்தில் நடந்த குளறுபடிக்கு கோர்ட்டும் துணைநின்று அவருடைய அவதூறு வழக்கு தொடர அனுமதி அளித்துள்ளது.

amala-paul-marriage-03

amala-paul-marriage-03

Continue Reading
To Top