Connect with us
Cinemapettai

Cinemapettai

amala-paul-cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

19 வயது வித்தியாசமுள்ள ரொமான்டிக் இயக்குனருடன் ஜோடி சேரும் அமலா பால்.. படம் வேற லெவல் கம்போ

2001ம் ஆண்டு வெளியான மின்னலே படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன்.

நீதானே என் பொன்வசந்தம், விண்ணைத்தாண்டி வருவாயா, என்னை அறிந்தால் இதுபோன்ற தூய தமிழ் பெயர்களை மட்டுமே தனது படத்திற்கு டைட்டிலாக வைப்பதில் அதிக கவனம் செலுத்துவார்.

தன்னோட படங்களில் எல்லாம் காதலை மையப்படுத்தி ரொம்பவே சுவாரசியமான இயக்கிய இருப்பார். அத்தகை இயக்குனர் தற்போது திடீர்னு அமலாபாலுக்கு ஜோடியாக ஆந்தாலஜி படத்தில் நடிக்கப்போகிறாராம்.

இந்த ஆந்தாலஜி படமும் கௌதம் மேனனின் தனித்துவமான லவ் ஸ்டோரியையே தழுவி இருக்கிறது. ஐசரி கணேஷ் தயாரிக்கும் இந்தப் படத்துல ஒன்றல்ல இரண்டல்ல நான்கு முக்கிய இயக்குனர்களான கௌதம் வாசுதேவ் மேனன், ஏ எல் விஜய், வெங்கட் பிரபு, நலன் குமாரசாமி ஆகியோர் கைகோர்ப்பதாக தெரிகிறது.

இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, பிக்பாஸ் பிரபலமான சாக்ஸி, மேகா ஆகாஷ் உள்ளிட்ட பிரபலங்களும் இந்தப்படத்தில் நடிக்கவிருக்கின்றனர்.

கௌதம் மேனனின் இயக்கத்தில் வெளியான படங்களையே திரையில் பார்த்து கொண்டிருந்த ரசிகர்களுக்கு, தற்போது முதல் முதலாக திரையில் கௌதம் வாசுமேனனை அமலாபாலுடன் ஜோடியாக பார்க்கப்போகிறோம் என்ற ஆசையோடு ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இதேபோல் கொஞ்ச நாளைக்கு முன்னாடி இயக்குனர் செல்வராகவன் திடீரென ‘சாணி காயிதம்’ படத்தில் நடிகராக அறிமுகமாகி ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்தார், அவரைப்போலவே தற்போது கௌதம் மேனனும் படத்தில் நடிக்க தொடங்கிவிட்டார் என கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

Continue Reading
To Top