எல்லா எதிர்ப்புகளையும் மீறி தனுஷுடன் இணைந்த அமலாபால்!
விசாரணையை தொடர்ந்து இயக்குனர் வெற்றிமாறன், தனுஷை வைத்து தனது கனவு படமான வட சென்னையை இயக்கி வருகிறார். இதில் தனுஷ் ஜோடியாக அமலாபால் நடிக்கவுள்ளார்.
இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதால்தான் இவரும் விஜய்யும் பிரிந்ததாக இணையத்தில் ஒரு செய்தி பரவி வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் விவாகரத்துக்காக கோர்ட் படி ஏறிய கையோடு, நேற்று முதல் வட சென்னை படப்பிடிப்பில் கலந்துகொண்டுள்ளார் அமலாபால்.
இவர்களுடன் சமுத்திரக்கனி, டேனியல் பாலாஜி, ஆண்ட்ரியா, கிஷோர், கருணாஸ் ஆகியோரும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள்.
