தனுஷின் ‘வேலையில்லா பட்டதாரி;, ‘அம்மா கணக்கு’ ஆகிய படங்களில் நடித்த அமலாபால், தற்போது ‘வடசென்னை’ படத்திலும் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் இந்த படத்தில் இருந்து விலகிவிட்டதாக கூறப்படும் நிலையில் மீண்டும் ஒரு தனுஷ் படத்தில் அவர் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

அதிகம் படித்தவை:  தனுஷிற்கு ஜோடியாக தமிழில் அறிமுகமாகும் பிரேமம் நாயகி

தனுஷின் ‘வேலையில்லா பட்டதாரி’ தற்போது கன்னடத்தில் ரீமேக் ஆகவுள்ளது. இந்த படத்தின் கன்னட உரிமையை ‘லிங்கா’ தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் பெற்றுள்ளார்.

இந்த படத்தில் தனுஷ் கேரக்டரில் மனோரஞ்சன் நடிப்பார் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அமலாபால் கேரக்டரில் அவரே நடிப்பார் என தெரிகிறது. இயக்குனர் விஜய் விவாகரத்து காரணமாக தமிழ்ப்படவுலகம் அமலாபாலுக்கு அறிவிக்கப்படாத தடை போட்டுள்ளதாக கூறப்படும் நிலையில் தற்போது கன்னட திரையுலகிற்கு சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.