‘விசாரணை’ படத்தைத் தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘வடசென்னை.

‘வடசென்னை’ 3 பாகங்களாக வரவிருக்கிறது. இதில் 3 பாகங்களிலும் நாயகி அமலா பால் கதாபாத்திரம் வருவது போன்று வடிவமைத்திருக்கிறார் இயக்குநர் வெற்றிமாறன். மீனவப் பெண் கதாபாத்திரம், 3 பாகங்களிலும் வரும் கதாபாத்திரம் என்பதால் மீனவப் பெண்களுடைய பேச்சு மொழியை கற்றுக் கொண்டு நடித்து வருகிறார்.

இப்படத்தின் முதல் பாகம் அடுத்தாண்டு வெளியாக இருக்கிறது. இப்படத்தின் கதைக்களம் 40 ஆண்டுகளை உள்ளடக்கியது என்பதால் மொத்த படக்குழுவுமே கடுமையாக உழைத்து வருகிறார்கள்.

மேலும், இப்படத்தில் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது.