நடிகை அமலா பாலும், இயக்குனர் விஜயும் காதலித்து கடந்த 2014ம் ஆண்டு ஜூன் மாதம் திருமணம் செய்துக்கொண்டனர்.

திருமணத்திற்கு பிறகு அமலா பால் சினிமாவில் நடிப்பதை விஜய் குடும்பத்தினர் விரும்பவில்லை.

இதனால் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. எனவே, இருவரும் பேசி சுமூகமாக பிரிந்து விடுவது என்று முடிவு செய்தனர்.

விவாகரத்து கோரி கடந்தாண்டு சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். பின்னர் இருவருக்கும் விவாகரத்து வழங்கப்பட்டது.

விவாகரத்து கிடைத்த அன்று வெளியே வந்த அமலாபால் காரில் உட்கார்ந்து பத்து நிமிடங்கள் கதறி அழுதார்.

இயக்குனர் விஜய் மனம் உடைந்து நடந்து சென்றதைப் பார்த்து குலுங்கி அழுதார்.

இந்நிலையில் இயக்குநர் விஜய்க்கு இரண்டாவது திருமணம் செய்து வைக்க அவரது பெற்றோர்கள் முயற்சி செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

செய்தி அறிந்த போது அமலாபால் ஒரு விளம்பர சூட்டிங்கில் இருந்தார். வேகமாக மேகப் அறைக்குள் சென்று விட்டார்.

நீண்ட நேரம் அழுது கொண்டே இருந்தார். இயக்குனருக்கு என்ன செய்வது என்று தெரியாமல் ஷூட்டிங்கை கேன்சல் செய்தார்.

அமலா வீங்கிய கண்களுடன் கார்ஏறிப் போய்விட்டார். பரிதாபம்.