பால் நடிகையின் அபிமான நடிகரான கொலவெறி நடிகர் சென்னையின் முக்கிய பகுதியை மையமாக வைத்து எடுக்கப்படும் படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தில் பால் நடிகையும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமானார். ஆனால், திடீரென இப்படத்தில் இருந்து விலகுவதாக அறிவித்துவிட்டு, இதற்கு கால்ஷீட்தான் பிரச்சினை என்று மழுப்பலாக ஒரு பதிலையும் சொல்லிவிட்டு சென்றுவிட்டார்.

ஆனால், உண்மையில் கால்ஷீட் பிரச்சினையில்தான் அவர் வெளியே போனாரா? என்று கோலிவுட் வட்டாரத்தில் பெரிய கேள்வியாக எழுந்து வந்தது.

ஆனால், உண்மையில் அவர் கால்ஷீட் பிரச்சினைக்காக வெளியே செல்லவில்லை. அவரை படக்குழுவினரே படத்தில் இருந்து தூக்கி எறிந்ததாக கூறப்படுகிறது.

ஏனென்றால், கொலவெறி நடிகர் தனது படங்களில் தொடர்ந்து பால் நடிகையை நடிக்கவைப்பதால் இரண்டு பேரையும் இணைத்து நிறைய வதந்திகள் பரவத் தொடங்கியது.

இது கொலவெறி நடிகரின் வீட்டில் உள்ளவர்களுக்கும் பெரிய தலைவலியை கொடுத்ததாம்.

“மீண்டும் மீண்டும் பால்  தான் வேண்டுமா..? அப்படி என்னதான் இருக்கு?” என்று வெகுண்டு எழுந்த மனைவி கடுமையாக கணவரை மிரட்டியதாகவும் ..பால் நடிகையை நேரில் கடுமையாக மிரட்டி விரட்டியதாகவும் கிசு கிசு கிளம்பியது.

இதனால், இந்த பிரச்சினைக்கு முடிவுகட்ட கொலவெறி நடிகர்தான் பால் நடிகையை அந்த படத்தில் இருந்து நீக்கச் சொன்னதாக கூறப்படுகிறது.

ஆனால், பால் நடிகை நீக்கப்பட்டார் என்று சொன்னால் அது பெரிய விஷயமாக பேசப்படும் என்று நினைத்த படக்குழு, அவர் விலகிவிட்டதாக அறிவித்ததாம்.