மூன்றாவது முறையாக ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தளபதி விஜய் தன் 62வது படத்தில் நடித்து வருகிறார். துப்பாக்கி மற்றும் கத்தி படத்தை தொடர்ந்து இவர்களை இணையும் இப்படத்தை சன் பிச்சர் பிரமாண்ட பொருட்செலவில் தயாரிக்கிறது.

படத்திற்கு இசை புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார். கிரீஸ் கங்காதரன் ஒளிபதிவு செய்கிறார். ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார், ஜெயமோகன் வசனம் எழுதுகிறார்.

முதலில் சென்னை பனையூர், அடுத்தது கொல்கத்தா. தற்பொழுது மீண்டும் சென்னையில் மாதா மருத்துவ கல்லூரியில் ஷூட்டிங் விறு விறுப்பாக நடந்து வருகின்றது.

VIJAY 62

இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார்.

pia bajpai

மேலும் இப்படத்தில் இரண்டாவது ஹீரோயின் ஆக ‘கோ’ புகழ் பியா பாஜ்பாய் நடிக்கிறார் என்ற தகவல்கள் வெளியானது.

இந்நிலையில் “தவரான செய்தி . தளபதி 62-வில் நான் நடிக்கவில்லை.” என்று தன் ட்விட்டரில் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

pia bajpai

எனவே பரவி வரும் செய்தி வதந்தியே என்பது உறுதியாகிவிட்டது.